அருமைக் காலத்துப் பெருமை காட்டிய எண்மைக் காலத்து இரக்கத்தானும்; எண்மைக் காலத்து-தாம் எளியராகிய கற்புக் காலத்திலே, அருமைக் காலத்துப் பெருமை காட்டிய இரக்கத்தானும் - களவுக் காலத்துத் தமது பெருமை உணர்த்திய வருத்தத்தின் கண்ணும். |
உதாரணம்: |
“வேம்பின் பைங்கா யென்றோழிதரினே தேம்பூங் கட்டியென்றனிரினியே பாரி பறம்பிற் பனிச்சுனை தெண்ணீர் தைஇத் திங்கட்டண்ணிய தரினும் வெய்யவுவர்க்குமென்றனி ரையவற்றாலன்பின் பாலே”1 |
(குறுந் - 196) |
பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் - பாணருங் கூத்தரும் விறலியருமென்று சொல்லுகின்ற இம்மூவரும், பேணிச் சொல்லிய குறைவினை எதிரும் -விரும்பிக் கூறிய குறையுறும் வினைக்கு எதிராகவும், கூற்று நிகழும். |
‘எதிரும்’ என்றது அவர் வாயில் வேண்டியவழித் தோழி அவர்க்கு மறுத்தலும் மறுத்தாள்போல் நேர்தலுங் கூறியதாம். |
உதாரணம்: |
“புலைமக னாதலிற் பொய்ந்நின் வாய்மொழி நில்லல் பாண செல்லினப் பரியல் பகலெஞ்சேரி காணி னகல்வய லூர னாணவும் பெறுமே”2 |
இது, பாணர்க்கு வாயின் மறுத்தது. |
செய்யானாய் உள்ளான் எனத் தலைவர்மீது புலந்து மொழிதல் பொருந்துமோ? பரத்தமையை வெறுத்து வந்து தங்குதலில் வல்லராகிய தலைவர், திருமகள் நீங்குதலால் சில அரிசியைக் கொழித்து தாமே சமைத்து உண்டு தனித்திருந்து புதல்வன் பாலில்லாமல் சுருங்கிய முலையைச் சுவைக்கப் பார்த்து இங்கேயே தங்கினார் ஆதலை அறிந்து வைத்தும் அவர் பரத்தமைக்காக மாறுபடுவோர் அறியாமையுடையரேயாவார். 1. பொருள்: பக்கம் 152 - 153ல் காண்க. 2. பொருள்: பக்கம் 153ல் காண்க. |