பக்கம் எண் :

கற்பியல் சூ.529
 

பொழுதில்  தலைவியது  மெல்லென்ற  சீறடியைப்  புல்லிய இரத்தற் கண்ணும் தலைவன் கூற்று நிகழும்
என்றவாறு.
  

உதாரணம்
  

“ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவதன்று கொல் என்று”
1
  

(குறள்-1307)
 

“ஊடுக மன்னோ ஒளியிழை யாம் இரப்ப
நீடுக மன்னோஇரா”
2

(குறள்-1329)
 

“ஊடலில் தோன்றுஞ் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடுபெறும்”
3

(குறள்-1322)
 

எனவரும்,
  

உறலருங்குரைமையி4னூடன்     மிகுத்தோளைப்   பிறபிற   பெண்டிரிற்   பெயர்த்தற்   கண்ணும்
என்பது-ஊடல் மிகுத்தோர் உறுதற் கருமையாற் பிறபிற பெண்டிர் ஏதுவாக ஊடல் உணர்த்தற் கண்ணும்
என்றவாறு.
  

“புனவளர் பூங்கொடி யன்னாய்” என்னும் மருதக்கலியுள்,
  

“ஒருத்தி, புலவியாற் புல்லாதிருந்தாள் அலவுற்று
வண்டினம் ஆர்ப்ப இடைவிட்டுக் காதலன்
தண்தார் அகலம் புகும்”
5

(கலி-12)


1-3. பொருள் : புணர்ச்சி  நீடிக்குமோ நீட்டியாதோ  எனக் கருதலால்  புணர்ச்சிக்கு  இன்பம் தரும்
ஊடலிலும் ஓர் துன்பம் உண்டு.
  

ஒளியிழை ஊடல் கொள்க; அவள் ஊடலைத் தீர்க்கும்வரை இரவும் நீடிப்பதாக.
  

ஊடல் காரணமாகத் தோன்றும் சிறிய துன்பம் அவளின் தலையளிவாடினும் பின்னர்ச் சிறப்புப் பெறும்.
  

4. உறல் அருங்குரைமையின்-உறல் அருமையின்-இதில் குரை என்பது அசைநிலையிடைச் சொல்.
  

5. பொருள் : ஒருத்தி  தலைவன்பாற்  கொண்ட  புலவியால் அவனைப் புல்லாதிருந்தாள். வண்டினம்
ஆர்ப்பரித்து   மொய்க்கையால்   வருத்தமுற்று   இடையே 
புலவியைக் கைவிட்டு அவள் தன்னை
வணங்குதலால் அவன் தண்தார் மார்பில் முயங்கும்.