பக்கம் எண் :

28தொல்காப்பியம் - உரைவளம்
 

குறித்தும் செய்யா நிற்கும் பெரிய சிறப்பொடு சேர்தற் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.
  

நெய்யணி மயக்கமாவது வாலாமை நீங்கி நெய்யணிதல் நோக்கிச் சேர்தல் எனக் கூட்டுக.1
  

வாராய் பாண நகுகம் நேரிழை
கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக்குதவி
நொய்யோ டிமைக்கும் ஐயவித் திரள்காழ்
விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப்
புதல்வனை யீன்றெனப் பெயர்பெயர்த்து அவ்வரித்
திதலை அல்குல் முதுபெண்டாகித்
துஞ்சுதியோ மெல்அஞ்சில் ஓதியெனப்
பன்மாண் அகட்டிற் குவளைஏற்றி
உள்ளினென் உறையும் எற்கண்டுமெல்ல
முகை நாள் முறுவல் தோற்றித்

தகைமலர் உண்கண் புதைத்து வந்ததுவே
2

(நற்றிணை-370)
  

எனவரும்.
  

பயங்கெழு     துணையணைப் புல்லிப் புல்லாது உயங்குவனள் கிடந்த கிழத்தியைக்  குறுகி அல்கல்
முன்னிய  நிறையழி  பொழுதின்  மெல்லென்  சீறடி புல்லிய இரவினும் என்பது-தலைவன்  பரத்தையிற்
பிரிந்துழி  ஊடற்  கருத்தினளாய்ப்  பயங்கெழு துணை அணையைப் புல்லிப் புல்லாது வருந்திக் கிடந்த
தலைவியைக் கிட்டித் தங்குதலைக் குறித்த நிறையழி


1. வாலாமை- தூய்மையின்மை. நெய்யணிதல்-எண்ணெய் நீராட்டுதல். இது குழந்தை பெற்ற பத்துநாள்
கழித்துச் செய்யப்படுவது.
  

2. பொருள் : பாண! வருக.  சுற்றம்  காக்கக்  கடுஞ்சூலுடையளாய்  இருந்து நம்  குடிக்கு மகவையீன்று
நெய்யொடு விளங்கும் வெண் சிறுகடுகு எங்கும் சிதறிக் கிடக்கப் பாயலில் கிடந்தவளாகிய நேரிழையைக்
குறுகி ‘அம்சில் ஓதி! நீ புதல்வனைப் பெற்றமையால் மனைவி எனும் பெயரினைத்  தாய்எனும்படி மாற்றி
முதியபெண்டு ஆகி தூங்குகின்றாயோ’ என என் கைக்குவளையால் அவள் வயிற்றில் தடவி சிலபொழுது
அங்குத்   தங்கிய   என்னைநோக்கி  முறுவலித்துத்  தன்  கண்களைப்  புதைத்தாள்.  அது  எனக்கு
நகையுடையதாயிருந்தது. இப்போது இவள் ஊடியிருக்கும் நேரத்தில் அதை நினைந்து நகுவோம்.