“யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று”1 |
(குறள்-1314) |
“தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல் எம்மை மறைத்திரே என்று”2 |
(குறள்-1318) |
“இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள்”3 |
(குறள்-1315) |
“தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீர் இந்நீரர் ஆகுதிர் என்று”4 |
(குறள்-1319) |
“கோட்டுப் பூச்சூடினுங் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று”5 |
(குறள்-1313) |
எனவரும். பிறவும் அன்ன. |
புதல்வற் பயந்த புனிறுநீர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி ஐயர்பாங்கினும் அமரர்ச் சுட்டியுஞ் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் என்பது-புதல்வனைப் பயந்த ஈன்றணிமை நீங்கின பொழுதின்கண் நெய்யணி மயக்கம் புரிந்தவளைக் குறித்து முனிவர் மாட்டும் அமரரைக் |
1-5. பொருள் : மற்றவரைக் காட்டிலும் நாம் சிறந்த காதலுடையோம் என்றேன். அவ்வளவில் அவள் யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும் என்று ஊடினாள். யான் உலகக் காதலர் யாவரினும் என்று சொன்னதை அவள் எனக்குப் பல காதலியர் இருப்பதாகக் கருதிவிட்டாள். |
அவட்குப் பயந்து தும்மலை அடக்கினேன். உடனே அவள் யாரோ நினைக்க அதை எனக்கு மறைத்தீர் என அழுதாள். |
இப்பிறவியில் நாம் பிரியோம் என்றேன். அவள் உடனே அடுத்த பிறவியில் பிரிவோமோ என எண்ணிக் கண்ணீர் விட்டாள். |
அவள் ஊடலை நான் நீக்க முற்பட்டால் இப்படித் தானே பிறமகளிர் ஊடலையும் நீக்குவீர் எனப்புலந்தாள். |
கோட்டுப்பூவை அவள் கூந்தலில் சூடினும் என் மூலம் ஒருத்திக்கு நின் கருத்தைக் கூறச் சூடினீர் என்று புலப்பாள். |
இவை ஐந்திலும் தலைவன் இயல்பாகச் செய்தனவற்றைத் தலைவி தவறாகக் கருதி ஊடியதாகக் கூறப்பட்டமை காண்க. |