1. பொருள் : நெஞ்சமே! ஒண்ணுதலானவள், யான் அழகு செய்தலைப் பொறாது மாறுபட்ட முகத்தளாய், அழைக்கவும் கேளாளாய் குணம் நீங்கத் தனித்து மெல்ல மெல்ல நிலம் வடுக்கொள நடந்துவந்து, கூரிய பற்கள் தோன்றப் பொய்யான முறுவலுடன் அவள் எண்ணியதையான் அறியுமுன் யான் வினைமேற் பிரிதலுக்கு இசையாத நினைவோடு, ஐயனே! கானவழியில் எம்மைப் பிரிந்து கடக்க நினைப்பீராயின் காதலரைப் பிரிதல் அறமன்று என்று கூறிய பழமொழி பொருளற்று அப்படியே கழிக, என்று குறிப்பால் முகத்தால் உரைத்துக் கண்ணீர் நிறைந்த நோக்கமொடு தன் புதல்வன் தலையில் சுற்றிய மாலையை மோந்து உயிர்த்தபோது யான் அவளது அணியிழந்த தோற்றம் கண்டு செலவு ஒழிந்தேன். யான் பக்கத்திருக்கவும் இப்படி வருந்துபவள் பிரிந்தால் உயிர்வாழாள் அல்லளோ? |