பக்கம் எண் :

கற்பியல் சூ.535
 

வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத்து
எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்திணைப்
பானாய் துன்னிய பறைக்கட் சிற்றில்
குயில் காழ் சிதைய மண்டி அயில்வாய்க்
கூர்முகச் சிதலை வேய்ந்த
போர்மடி நல்லிறைப் பொதியிலானே”
1

(அகம்-167)
 

எனவரும்.
  


உடன்  சேறற்  செய்கையொடு  என்பது-உடன்போக வேண்டுமெனச் சொல்லிய வழியும் என்றவாறு. ஒடு
எண்ணின் கண் வந்தது.
  

“செருமிகு சினவேந்தன்” என்னும் பாலைக் கலியுள்
  

“எல்வளை எம்மொடு நீவரின் யாழநின்
மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை
அல்லிசேர் ஆயிதழ் அரக்குத்தோய்ந்தவை போலக்
கல்லுறின் அவ்வடி கறுக்குந அல்லவோ”
2
 

(கலித்-13)
  

எனவரும்.
  

1. பொருள் : நெஞ்சமே! மாயோளொடு வானைத்தொடும்  நெடிய  வீட்டில் புனையப்பட்ட படுக்கையில்
இருத்தலால்  இன்று  இனிதாகப்  பொழுது கழிந்தது.  நாளை,  வழிப்போம் வணிகர்களைக் கொன்று
கொள்ளையிட்டுண்ணும்  வேட்டுவராகிய  பகைவர்க்கு  அஞ்சி குடிபெயர்ந்த பாழிடத்து, யானை தன்
முதுகை  உராய்ந்ததால்  சுவரில்  உள்ள விட்டமரம் வீழ தங்கியிருந்த மணிப்புறா விட்டு ஓடிய மரம்
சோர்ந்த  மாடத்தையும்,  கடவுட் பூசையில்லாமையால்  பொலிவற்ற திண்ணையில் ஈன்ற அணிய நாய்
தங்கும்  சிறிய  வீட்டினையும்,  சிதல்கள்  மூடிக்  கொள்ளுதலின் கூரை மடிந்து இற்ற இறப்பினையும்
உடைய  அம்பலத்தில்  நாம்  தனிமை  முற்பட  மூடாத கண்ணேமாய்த்  தங்கி  இருப்போமோ என்
செய்வோம்.
  

இது பிரிந்துவந்தபின் நெஞ்சுக்குக் கூறியது.
  

2. பொருள் : ஒளிமிக்க வளையலையுடையாய்!  என்னொடு  நீ பாலை வனவழிவரின் அங்குள்ள கற்கள்
உறுத்தலால்  நின் தாமரைச்  சேவடியானது  அல்லியின்  இதழ்கள்  அரக்குத் தோய்ந்து நிறம் மாறிக்
காணப்படுதல் போல் இரத்தமே கட்டிக் கருமையாய்க் காணப்படுமல்லவோ?