பக்கம் எண் :

38தொல்காப்பியம் - உரைவளம்
 

பெய்யினி வாழியோ பெருவான் யாமே
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
இவளின் மேவின மாகிக் குவளைக்
குறுந்தாள் நாள் மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல்லணையேமே.”
1

(குறுந்-270)
  

இது வந்துபுகுந்த தலைவன் கூற்று.
  

அவ்வழிப்  பெருகிய  சிறப்பின்  கண்ணும் என்பது-தலைவன் பிரிந்துழிப்2 பெருகிய சிறப்பினும் கூற்று
நிகழும் என்றவாறு,
  

“கோடல் எதிர்முகைப் பசுவீமுல்லை
நாறிதழ்க் குவளை யொடிடைப்பட விரைஇ
ஐது தொடை மாண்ட கோதை போல
நறிய நல்லாள் மேனி

முறியினும் வாயது முயங்குகம் இனியே.”
3

(குறுந்-62)
  

எனவரும்.
  

பேரிசை  யூர்திப்  பாகர்  பாங்கினும்  என்பது-தானுற்ற  வின்பத்தினைப்  பாகற்குக் கூறுதற் கண்ணும்
என்றவாறு.
  

உதாரணம்
  

“மறத்தற் கரிதால் பாக பன்னாள்
வறத்தொடு பொருந்திய உலகுதொழிற் கொளீஇய
பழமழை பொழிந்த புதுநீர் அவல
நாநவில் பல்கிளை கறங்க நாவுடை


1. பொருள்: பெருவானமே!  யாம்  வினைமுடித்துத்  தலை  நிமிர்ந்த உள்ளமொடு இவளையடைந்து
இவளின்  மலர்  நாறும்  கூந்தலாகிய பாயலிடத்து  உள்ளேம். அதனால்  நீ  இருள்  நீங்கமின்னி
இனிய துளிகளைச் சிதறி முரசென முழங்கி இடித்து இடித்துப் பெய்க.
  

2. பிரிந்துழி   என்பது  பிரிந்து  வந்துழி  என்றிருத்தல்  வேண்டும். உதாரணச் செய்யுள் அதற்கேற்ப
அமைந்தது காண்க.
  

3. பொருள் : காந்தள் மலர் முல்லையரும்பு  குவளைமலர்  இவற்றை  இடையிடையிட்டுத் தொடுத்த
மாலை   போல்பவளாகிய  இவள் நறு நாற்றம்  உடையள் நல்லவள்;  இவளது  மேனி  தளிரினும்
அழகுடையது முயங்குதற்கும் இனியது.