மணியொலி கேளாள் வாணுதல் அதனால் ஏகுமின் என்ற இளையர்வல்லே இல்புக் கறியுநராக மெல்லென மண்ணாக் கூந்தல் மாசறக் கழீஇச் சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய அந்நிலை புகுதலின் மெய்வருத் துறாஅ அவிழ் பூ முடியினள் கவைஇய மடமா அரிவை மகிழ்ந்தயர் நிலையே”1 |
(நற்றிணை-42) |
எனவரும். |
காமக் கிழத்தி மனையோளென்றிவ ரேமுறு கிளவி சொல்லிய வெதிரும் என்பது-காமக் கிழத்தியும் மனையாளும் என்று சொல்லுமிருவரும் பாதுகாவலாகக் கூறிய கூற்றினெதிரும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. |
இவ்விருவரும் இல்லுறை மகளிராதலின் தலைவன் மாட்டு நிகழுமவை இருவருக்கும் ஒக்கும் என்க. |
அஃதாவது2 வழிவந்தவாறென்னை யெனவும் வருத்த முற்றீரெனவும் இந்நிகரன பல கூறுதல். |
உதாரணம் |
“எரிகவர்ந்துண்ட என்றூழ் நீளிடை அரிய வாயினும் எளிய அன்றே அவவுறு நெஞ்சங் கவவுநனி விரும்பக் |
1. பொருள்: பாகனே! வறட்சியொடு இருந்த உலகம் மகிழ்வுடன் தொழில் செய்யுமாறு பழமைபோலவே மழைபொழியப் புதுநீர் உள்ள குளங்களில் நாவால் ஒலியெழுப்பும் தவளைகள் இடும் ஒலியால் நம் தேர் மணி யொலியைக் கேளாதவளாய் உள்ள தலைவியிடம் என் வரவுகூறுமின் என இளையரைவிடுப்ப அவர் சென்றுகூற உடனே அவள், இதுநாள் வரையும் கழுவாத கூந்தலை அழுக்குப்போகக் கழுவி நீர் ஆடி, மலர்கொண்டு கூந்தலிற் சூடியிருந்த அந்நிலையில் யான் சென்றேனாக உடனேதன் உடல் துவள வந்து கூந்தல் முடியவிழ என்னை அணைத்து மகிழ்ந்த அந்நாள் நிலைமை இந்நாள் யான் மறத்தற்கரிதாகும். |
2. அஃதாவது-பாதுகாவலாகக் கூறுதலாவது. |