பின்னர் அது கைவிட்டு இல்லறமே நிகழ்த்தித் துறவறத்தே செல்வனென்றுணர்க. இக் கற்புக் காரணமாகவே பின்னர் நிகழ்ந்த ஒழுகலாறெல்லாம் நிகழ வேண்டுதலின் அவற்றையும் கற்பென்று அடக்கினார். இருவரும் எதிர்ப்பட்ட ஞான்று தொடங்கி உழுவன்பால் உரிமை செய்து ஒழுகலிற் ‘கிழவனும் கிழத்தியும்’ என்றார். தாயொடு பிறந்தாருந் தன்னையருந் தாயத்தாரும் ஆசானும் முதலியோர் கொடைக்குரியர் என்றற்கு ‘மரபினோர்’ என்றார். |