1. பொருள்: உளுந்து பெய்துசமைத்த பொங்கலாகிய உணவுக் குவியல் பலராலும் உண்ணப்பட, வரிசையாகக் கால்களமைத்துப் போடப்பட்ட பந்தரில் புதுமணல் பரப்பி, விளக்கேற்றி, தோரணங்கள் தொங்கவிட்டு, விடியற்காலையில் தீயகோள்களை நீங்கிய திங்களை உரோகணி நாள் கூடியநேரம் வந்ததாக, தலையில் குடம் தாங்கியவரும் கையில் மண்டை எனும் கலம் கொண்டவருமாகிய திருமணச் சடங்குகளைச் செய்யும் முதியபெண்டிர்கள் மங்கலப் பொருள்கள் முன்னும் பின்னுமாகத் தரத் தர, புதல்வர் பெற்ற மகளிர் நால்வர் கூடி மணமகளை நோக்கிக் கற்பொழுக்கத்துவழாமல் நல்ல மனையறங்களைச் செய்து கணவன் விரும்பும் பெண் ஆகுக எனக் கூறி நீருடன் அலர்களையும் நெல்லையும் தூவி வாழ்த்த அவை மணமகள் கூந்தலில் விளங்க இப்படித் திருமண நிகழ்ச்சி கழிந்த பின்னர் சுற்றத்தார் சிலர் திடீரென வந்து நீ மனைக்கிழத்தியாவாயாக எனச் சொல்லி என்னுடன் கூட்டத் தனி அறையில் புணர்தற்குரிய இரவிலே, அவள் முதுகு புறத்தை வளைத்து ஆடைக்குள் மறைந்த அவள் உடம்பைத் தழுவி புணரும் விருப்பத்தால் அவள் முகத்தை மூடியிருந்த கைகளை அகற்றியபோது, மாயோளாகிய அவள் அஞ்சியவளாய் பெருமூச் செறிய, யான் உன் மனதில் உள்ளதை மறையாது உரை என்று கூற, அவள் மனமகிழ்ந்தவளாய் ஒய்யென நாணித் தலை கவிழ்ந்தாள். |