பிறரொடு கூட்டமுண்மையும் கூறிற்றாம். ஆண்டுத்தோழி கூறுவனவும் ‘ஒன்றென முடித்த’லாற் கொள்க. |
“வாராய் பாண நகுகம் நேரிழை கடும்புடைக் கடுஞ்சூனங்குடிக் குதவி நெய்யோ டிமைக்கு மையவித் திரள்காழ் விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப் புதல்வனை யீன்றெனப் பெயர் பெயர்த்தவ்வரித் திதலை யல்குன் முதுபெண்டாகித் துஞ்சுதியோ மெல்லஞ்தி லோதியெனப் பன்மாண கட்டிற் குவளையொற்றி யுள்ளினெ னுள்ளுறை யெற்கண்டு மெல்ல முகை நாண் முறுவலொன்றித் தகைமல ருண்கண்கை புதைத்ததுவே”1 |
(நற்-370) |
இது நெய்யணி மயக்கம் பற்றித் தலைவன் கூறியது. |
“நெடுநா வொண்மணி கடிமனையிரட்டக் குரையிலை போகிய விரவு மணற்பந்தர்ப் பெரும்பாண் காவல்பூண்டென வொருசார் திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப வெறியுற விரிந்த வறுவை மெல்லணைப் புனிறு நாறு செவிலியொடு புதல்வன்றுஞ்ச வையவி யணிந்த நெய்யாட்டீரணிப் பசிநோய் கூர்ந்த மென்மையாக்கைச் சீர்கெழு மடந்தை யீரிமைபொருந்த நள்ளென் கங்குற் கள்வன்போல வகன்றுறை யூரனும்வந்தனன் சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே”2 |
(நற்றிணை-40) |
1. பொருள்: பக்கம் 28ல் காண்க. |
2. பொருள் : கடிமனையில் மணிநா ஒலிக்க கீற்று வேய்ந்த பந்தரில் சுற்றிலும் ஒரு காலத்தில் பாணர் தலைவனைப் பரத்தையர் வளைத்துச் சூழ்ந்தது போல மகளிர் சூழ்ந்து நல்ல நேரத்தைப் பார்த்துக் கொண்டிருக்க ஈன்ற அணிமையுடைய புதல்வன் செவிலித்தாயொடு அணை மீது தூங்க, வெண் சிறு கடுகு கலந்த நெய் தேய்த்து நீராடிப் பசிநோய் மிகுந்த மெல்லிய உடம்பையுடைய மடந்தை தன் இரண்டு இமைகளும் மூடியிருக்கும் வேளையில் நள்ளென் இரவில் கள்வன் போலத் தலைவன் தன் தந்தை பெயரனாகிய தன் புதல்வன் பிறந்ததைக் காணும் காரணத்தால் வந்தான். |