எனவே1, புல்லாதிருந்தா ளென்றதனான் ஊடன் மிகுதி தோன்றுவித்து மகளிரும் மைந்தரும் வேனில் விழாச் செய்கின்றார் நாமும் அது செய்ய வேண்டுமென்று கூறியவாறு காண்க. |
பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப் பிரிவின் நீக்கிய பகுதிக் கண்ணும்-பரத்தையிற் பிரிவினது தவிர்ச்சிக் கண்ணே தனிமையுற்றிருந்த தலைமகனையுந் தலைமகளையுந் தன தருளினாலே தானும் பிரிவினெச்சத்துப் புலம்பி நின்றான் ஒருவன் தலைவிதனைக் கண்டருளுதற்கு அப்பிரிவினின்று நீக்கிய கூறுபாட்டின் கண்ணும்.2 |
“யாயிடைக் கவவுக்கை நெகிழ்ந்தமைபோற்றி மதவுநடைச் செவிலி கையென் புதல்வனை நோக்கி நல்லோர்க்கொத்தனிர் நீயிரிஃதோ செல்வற் கொத்தனெம் யாமெனமெல்லவென் மகன்வயிற் பெயர்தந்தேனே யதுகண் டியாமுங் காதலே மவற் கெனச்சாராய்ச் சிறபுறங் கவையினனாக வுறுபெயற் றண்டுளிக் கேற்ற பலவுழு செஞ்சேய் மண்போன் நெகிழ்ந்தவற் கலுழ்ந்தே நெஞ்சிறை பேகிய வறிவினேற்” |
இதனுள், ஒருத்தியை வரைந்து கூறாது நல்லோரைப் பொதுவாகக் கூறியவாறும் வேண்டினமெனப் புலம்பக்காட்டிக் கலுழ்ந்ததென ஈரங் கூறியவாறுங் காண்க. |
பிரிந்து வந்துழியல்லது புலத்தல் பிறவாமையின் ‘எச்சத்து’ என்றார். உதாரணம் வந்துழிக் காண்க. இதுவும் ஊடற்பகுதியாம். |
நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளும்-முன்னில்லாதொரு சிறைப்போய் நின்று நீட்டித்துப் பிரிவினால் தலைவன் அஞ்சிய நோயின் கண்ணும் : இது துனி. |
ஆகிய கூறுபாடுகளால் யான் கண்ட கனவு நன்றாயிருந்தது அது உண்மையாம்படி என் நெஞ்சமே கருதுவாயாக. |
1. எனவே-என்று தலைவன் கூறவே |
2. இளம்பூரணர் உரையே சிறக்கும். நச். உரை வலிந்துரை. |