‘கைபுனைவல்வில்’ நாண் ஊர்ந்தவழி இவள் ‘மையில் வாண் முகம் பசப்பூர்’தலும் அவன் ‘புனை மாண் மரீஇய அம்பு’ தெரிந்தவழி இவள் இனைநோக்குண்கண்ணீர்நில்லா’ மையும் பிறவுமாம். |
“பாஅலஞ்செவி” என்னும் பாலைக்கலி (5)யுள் |
“ஓரிரா வைகலுட் டாமரைப் பொய்கையு ணீர் நீத்த மலர்போல நீ நீப்பின் வாழ்வாளோ?1” |
“அந்நாள் கொண்டிறக்குமிவளரும் பெறலுயிரே”2 |
என, உடன் கொண்டு சென்மினெனத் தோழி கூறியது, கேட்ட தலைவன் இவளை உடன்கொண்டு போதல் எல்லாவற்றானும் முறையன்றென்று தோழிக்குக் கூறுவனவும் நெஞ்சிற்குக் கூறுவனவும் பிறவுங் கொள்க. |
“வேட்டச் செந்நாய் கிளைத் தூண்மிச்சில் குளவிமொய்த்த வழுகற் சின்னீர் வளையுடைக் கைய ளெம்மொடுணீஇய வருக தில்லம்ம தானே யளியளோவளிய ளென்னெஞ்சமர்ந்தோளே”3 |
(குறுந் -56) |
இது, தோழி கேட்பக் கூறியது. |
“நாணகையுடைய நெஞ்சே கடுந்திறல் வேனினீடிய வானுயர் வழிநாள் வறுமை கூறிய மன்னீர்ச் சிறுகுளத் தொடுகுழி மருங்கிற் றுவ்வாக் கலங்கல் கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணிச் சேறு கொண்டாடிய வேறுபடு வயக்களிறு |
1. பொருள் : தாமரைப் பொய்கையுள் நீர்வற்றிய காலத்து மலர் வாடுதல்போல நீ இவளைப் பிரியின் ஓர் நாள் இரவிலாயினும் வாழ்வாளோ? |
2. பொருள் : நீ பிரிந்த நாள் கொண்டு இவள் பெறலரிய உயிர் போய்விடும். |
3. பொருள் : என் நெஞ்சத்து அமர்ந்தாளாகிய தலைவி, வாழவிரும்பும் செந்நாய்கள் தோண்டியுண்ண எஞ்சியுள்ள காட்டு மல்லிகையிலைகள் விழுந்ததனால் அழுகிய சிறிது நீரை என்னோடு உண்ணுமாறு என்னுடன் உடன்போக வருவாளாக. அதுவே என் விருப்பம். அவ்வாறுவரின் அவள் இரங்கத் தக்கவளேயாவாள். |