செங்கோல் வாலிணர் தயங்கத் தீண்டிச் சொறிபுற முரிஞிய நெறிய யன்மராஅத் தல்குறு வரிநிழலசைஇ நம்மொடு தான் வருமென்ப தடமென்றோளி யுறுகணை மழவருள் கீண்டிட்ட வாறுசென் மாக்கள் சோறுபொதி வெண்குடைக் கன்மிசைக் கடுவளி யெடுத்தலிற் றுணைசெத்து வெருளேறு பயிலு மாங்கட் கருமுக முசுவின் கானத்தானே”1 |
(அகம்-121) |
இது நெஞ்சிற்குக் கூறியது. |
வேற்று நாட்டு அகல் வயின் விழுமத்தானும்-அங்ஙனம் வேற்று நாட்டிற் பிரியுங்காலத்துத் தானுறும் இடும்பையிடத்து தலைவற்குக் கூற்று நிகழும். |
விழுமமாவன : பிரியக் கருதியவன் பள்ளியிடத்துக் கனவிற் கூறுவனவும், போவேமோ தவிர்வேமோ என வருந்திக் கூறுவனவும், இவள் நலன் திரியுமென்றலும், பிரியுங்கொலென்று ஐயுற்ற தலைவியை ஐயந்தீரக் கூறலும், நெஞ்சிற்குச் சொல்லி அழுங்குதலும் பிறவுமாம். |
‘நெஞ்சு நடுக்குற’ என்னும் பாலைக்கலி (24)யுள் கனவிற் கூறியவாறு காண்க. |
“உண்ணாமையினுயங்கிய மருங்கி னாடாப்படிவத் தான்றோர்போல |
1. பொருள் : நெஞ்சமே! பிறர்க்குத் துன்பம் தரும் மழவர் ஓட்டிய வண்டிச் சக்கரம் பிளந்திட்ட வழியில் வணிகர்கள் தாம் கட்டுச்சோறு உண்டு கழித்த பனைக்குடைகளைக் காற்றடிக்க எழும்போது உண்டாம் ஒலிகேட்டு பெண்மானின் குரல் என எண்ணி ஆண்மான் அதை அழைக்கும் படியானதும் கருமுகக் குரங்குகள் உள்ளதும் ஆனகாட்டில் வெப்பம் மிக்க மேகம் பொழியாது மேலே சென்றதால் உலர்ந்த வழியில் நாளும் வறுமை மிக்க குளிக்கத் தோண்டிய சிறு குளத்தில் உண்ணுதற் கேலாத மண்ணொடு சேர்ந்த கலங்கிய நீரைக் கன்றொடுகூடிய மடப்பிடியைக் கழுவிப் பின்னர்த்தான் சேறாடிய களிறானது தன் முதுகு புறத்தை உராயும் மராமரத்தின் நிழலில் தங்கி உடன் வருவேன் என்று நம் தலைவி கூறுகிறாள். |
இதைக் கேட்ட யாம் நகை மிகவுடையேம் ஆனேம். |