வரைசேர் சிறுநெறி நிரைபுடன் செல்லுங் கான யானை கவினழி குன்ற மிறந்து பொருடருதலு மாற்றாய் சிறந்த சில்லையங் கூந்தனல்லகம் பொருந்தி யொழியின் வறுமை யஞ்சுதியழிதக வுடைமதி வாழிய நெஞ்சே நிலவென நெய்கனி நெடுவே லெஃகினிமைக்கு மழைமருள் பஃறோன் மாவண் சோழர் கழைமாய் காவிரிக் கடன் மண்டு பெருந்துறை யிறவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங் கடலோதம் போல வொன்றிற் கொள்ளாய் சென்று தருபொருட்கே”1 |
(அகம்-123) |
இதுபோவேமோ தவிர்வேமோ என்றது. |
“அருவியார்க்கும் பெருவரையடுக்கத் தாளி நன்மான் வேட்டெழற் கோளுகிர்ப் பூம்பொறி யுழுவை தொலைச்சிய வைந்நுதி யேந்து வெண்கோடு வயக்களிறிழக்குந் துன்னருங் கான மென்னாய் நீயே குவளை யுண்கணி வளீண்டொழிய வாள்வினைக் ககறியாயினின்னொடு போயின்று கொல்லோ தானே படப்பைக் கொடுமுளீங்கை நெடுமா வந்தளிர் |
1. பொருள் : நெஞ்சமே! உண்ணாமையால் வாடிய வயிற்றையும் நீராடாமல் மாசுபட்ட உடம்பும் உடைய விரதமுடைய சான்றோர்போல் அழகழிந்த யானைகள் செல்லும் மலைப்பக்கத்தில் கடந்துசென்று பொருளீட்டி வரவும் செய்யாய். தலைவியில் ஆகத்திற் பொருந்திக் கிடக்கின் வறுமை நீங்காது என அஞ்சுகிறாய். சோழரது காவிரியானது கடலிற் கலக்கும் பெருந்துறையில் இறால் மீனோடு கரைவந்து பின் கரையில் உள்ள மாலைகளோடு பெயர்வதுபோல நீயும் பொருளீட்டுதல், மனைக் கண் இருத்தல் என்னும் இரண்டில் ஒன்றன்பாற் சாராது உள்ளாய்? |