பக்கம் எண் :

66தொல்காப்பியம் - உரைவளம்
 

மீண்டு வருங்கால் வருந்தி நெஞ்சொடு கூறுவனவும் பிறவுங் கொள்க. அது,
  

“என்று கொலெய்து ஞான்றே சென்ற
வளமலை நாடன் மடமக
ளிளமுலையாகத் தின்னுயிர்ப் புணர்ப்பே”
1

  

“கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின்
வில்லோர் தூணி வீங்கப்பெய்த
வப்புநுனை யேய்ப்ப வரும்பிய விருப்பைச்
செப்படரன்ன செங்குழை யகந்தோ
றிழுதினன்ன தீம்புழற்றுய்வா
யுழுதுகாண் டுளையவாகி யார்கழல்
பாலிவானிற் காலொடு பாறித்
துப்பினன்ன செங்கோட்டியவி
னெய்த்தோர் மீமிசை நிணத்திற்பரிக்கு
மத்த நண்ணிய வங்குடிச் சீறூர்க்
கொடு நுண்ணோதி மகளிரோக்கிய
தொடி மானுலக்கைத் தூண்டுரற் பாணி
நெடுமால் வரைய குடிஞையொடிரட்டுங்
குன்று பினொழியப் போகியுரந் துரந்து
ஞாயிறு படினுமூர் சேய்த்தெனாது
துனைபரி துரக்குந் துஞ்சாச்செலவி
னெம்மினும் விரைந்துவல் லெய்திப் பன்மா
ணோங்கிய நல்லி லொருசிறை நிலைஇப்
பாங்கர்ப்பல்லி படுதொறும் பரவிக்
கன்று புகுமாலை நின்றோளெய்திக்
கைகவியாச் சென்று கண்புதையாக்குறுகிப்
பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித்
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ
நாணொடு மிடைந்த கற்பின் வாணுத
லந்தீங் கிளவிக் குறுமகண்
மென்றோள் பெறநசைஇச் சென்றவெனெஞ்சே”

(அகம்-9)
  

எனவரும். இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன் கண் அடக்குக.


1. பொருள் : வளமலை  நாடனின்  மடமகளின்  இளமுலையிடத்து இனிய  உயிரோடு கூடிய புணர்ச்சி
என்றைக்கு நமக்கு எய்துவதாகும்.