பக்கம் எண் :

கற்பியல் சூ.567
 

அவ்வழிப்  பெருகிய  சிறப்பின்  கண்ணும்-பிரிந்தவிடத்துத்  தான்பெற்ற  பெருக்கம் எய்திய சிறப்பின்
கண்ணும் மனமகிழ்ந்து கூறும்.
  

சி்றப்பாவன1  பகைவென்று  திறை  முதலியன கோடலும் பொருண் முடித்தலுந் துறை போகிய ஓத்தும்2
பிறவுமாம்.
  

உதாரணம்
  

‘கேள்கே டூன்றவுங் கிளைஞராரவும் - ‘(அகம்-93) எனவும், ‘தாழிகுடுமிய’ (குறுந்-270) என்பதனுட்
‘செய்வினை   முடித்த   செம்மலுள்ளமொடு’   எனவும்  மனமகிழ்ந்து   கூறியவாறு   காண்க.  ‘முன்னிய
முடித்தனமாயின்’ என்னும் (169) நற்றிணையுட் பொதுப்படச் சிறப்புக் கூறியவாறு காண்க.
  

பேரிசை  ஊர்திப்பாகர்  பாங்கினும்-அச்சிறப்புக்களை  எய்திய  தலைவன் பெரிய புகழையுடைத்தாகிய
தேரையுடைய பாகரிடத்தும் கூற்று நிகழ்த்தும்.
  

அவரது சிறப்பு உணர்த்துதற்குப் பாகரெனப் பன்மையாற் கூறினார்3.
  

“இருந்த வேந்த னருந்தொழின் முடித்தெனப்
புரிந்த காதலொடு பெருந்தேர் யானு


1. பொருள் : வெண்ணிற இருப்பைப் பூக்கள் காம்பு இற்று  பனிக்கட்டிகள் வீழ்வன  போலக்  காற்றால்
அலைக்கப்பட்டுப் பவளம் போலும் நிறமுடைய மேட்டுவழிகளில் குருதியின் மேல்பரக்கும் கொழுப்புப்
போலப் பரந்து விழும்படியான வழிகளில் உள்ள சிற்றூர்களில் மகளிரின் உலக்கைப் பாடல் கோட்டான்
குரலோடு   இசைக்கும்  மலைகள்   பின்னிடச்   சென்று   ஞாயிறு   மறையினும்   செல்லும்  ஊர்
நெடுந்தொலையதுஎன்று  கருதாமல்  விரைந்து  குதிரையைத்  துரந்து மூடாத  கண்களுடன்  செல்லும்
என்னைக்  காட்டிலும்,  குறுமகளது  மென்தோளை விரும்பிச் சென்ற என் நெஞ்சமானது வீட்டின் ஒரு
பக்கத்தில்   பல்லியின்  ஓசையைக்  கேட்டு  சகுனம்  பார்த்து  நிற்பாளாகிய  தலைவியை அடைந்து
கைகவித்துச்  சென்று  அவள்  கண்களைப்  பொத்தி
  அவள்  கூந்தலைத் தீண்டித்தோளைத் தடவிக்
கொடுத்து அவளொடு கலந்ததுவோ?
  

2. துறைபோகிய ஓத்தும்-கல்வியில் துறைபோகியதும்.
  

3. அவரது சிறப்பு உணர்த்துதற்குப் ‘பாகன்’  என  ஒருமையாற்  கூறாது  ‘பாகர்’  எனப்  பன்மையாற்
கூறினார்.