இன்னாத் தொல்சூள் எடுத்தற் கண்ணும் காமக் கிழத்தி நலம்பா ராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் கொடுமை யொழுக்கத்துத் தோழிக் குரியவை வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக் காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் வாயினின் வரூஉம் வகையொடு தொகைஇக் கிழவோள் செப்பல் கிழவது என்ப. |
(6) |
இளம் |
என்-எனின், கற்பின்கண் தலைவி கூற்று நிகழும் இடம் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. |
இ-ள்: ஏற்றல் முதலாக வாயிலின் வரூஉம் வகையொடு கூடத் தலைவி கூறல் உரியதாகும் என்றவாறு. |
அவனறிவாற்ற மறியுமாகலின் ஏற்றற் கண்ணும் என்பது-தலைவனது நினைவைத்1 தலைவி மிக அறியுமாகலின் அவனையுயர்த்துக் கூறுதற்கண்ணும் தலைவி கூற்று நிகழும். |
உதாரணம் |
“நின்ற சொல்லர் நீடுதோன்றினியர் என்றும் என்தோள் பிரிபறியலரே தாமரைத் தண்தாதூதி மீமிசைச் சாந்தின் தொடுத்த தீந்தேன்போலப் புரைய மன்ற புரையோர்கேண்மை நீரின்றமையா உலகம் போலத் தம்மின்றமையா நந்நயந்தருளி நறுநுதல் பசத்த லஞ்சிச் சிறுமை உறுபவோ செய்பறியலரே”2 |
(நற்றிணை-1) |
|
1. அறிவு-நினைவு என்றது தன்னையே நினைவன் தலைவன் எனத் தலைவி எண்ணுதல். உதாரணத்தில் நின்ற சொல்லர், தோள் பிரிவு அறியலர் என வருவனவற்றால் அறியலாம். |
2. பொருள் : என்றும் தவறாது நிலைத்த சொல்லுடையர்; எனக்கு எப்போதும் இனியவர்; என்றும் என் தோளைப் பிரியக் கருதாதவர். அப்படிப்பட்டவரது உயர்ந்த நட்பு தாமரைத்தாது ஊதிச் சந்தன மரத்தில் கட்டிய |