1. பொருள் : ஆடும் விறலிக்குப் பின் நிற்கும் முழவு வாசிக்கும் கோடியர்போல ஆடுமயில் முன்நிற்கப் பாறைப் பக்கமாகப் பலாப்பழத்தைத் தழுவியவண்ணம் ஆண் குரங்கானது நின்று தன் பிணையை அழைக்கும் படியான குன்றத்துக்குரிய தலைவன், நற்குடிப் பிறந்தவன், கூடியவரைப் பிரியாதவன், கெடுமொழி கூறாதவன், அன்புடையவன் எனத் தோழி! நீ நல்லன கூறி அவனை என்னோடு சேர்த்தாய். நீ நல்லவளே. அஞ்சி என்பானின் புகழ் அமைந்த பாடலில் பாண்மகள் அமைத்த பண்ணைக் காட்டினும், அவள் புதியதாக அமைத்த திறத்தைக் காட்டினும், எம் திருமணநாளைக் காட்டினும் இன்று எனக்கு இனியனாவான். |