புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்றகிழவனைப் புலம்புநனி காட்டி இயன்ற நெஞ்சந்தலைப் பெயர்த்தருக்கி எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும் என்பது-விருப்பமுடைய உள்ளத்தோடே புதுவோரது நலத்தின் பொருட்டு அகன்ற கிழவனைத் தனது தனிமை மிகவும் காட்டி அவன் மாட்டுச் செல்கின்ற நெஞ்சத்தை மீட்டு அருகப்பண்ணி அவன் காதலித்தாளை எதிர்ப்பெய்து கொண்டு புணர்ச்சியை மறுத்த ஈரத்தின் கண்ணும் கூற்று நிகழும். |