எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி வடித்தென உகுத்த தித்திப் பல்லூழ் நொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு கூர்நுனை மழுகிய எயிற்றள் ஊர்முழுது நுவலுநிற் காணிய சென்மே.” |
(அகம்-176) |
எனவரும். |
தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி எங்கையர்க்கு உரையென இரத்தற் கண்ணும் என்பது-பிறள் மாட்டுத் தங்கிய ஒழுக்கத்துக் கிழவனைத் தாழ்ந்து எங்கையர்க்கு உரை1யென வேண்டிக் கோடற் கண்ணுங்கூற்று நிகழும் என்றவாறு. |
‘அகன்றுறை’ என்னுங் கலியுள், (73) |
“நோதக்காய் எனநின்னை நொந்தீவார் இவ்வழித் தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன் நெகிழ் தொடிஇளையவர் இடைமுலைத்தாதுசோர்ந்து இதழ்வனப் பிழந்தநின் கண்ணிவந் துரையாக்கால் ........................................................ ........................................................ மண்டுநீர் ஆரா மலிகடல் போதுநின் தண்டாப் பரத்தை தலைக்கொள நாளும் புலத்தகைப்பெண்டிரைத் தேற்றி மற்றியாமெனில் தோலாமோ நின்பொய் மருண்டு”2 |
|
வளைத்துத் தழுவிய தழுவல் விடுபடின் அதற்கே வருந்துபவளாவாள். மேலும் தன்னிடத்து எழுதிய அழகுசிதைய அழுதவளாய் ஏக்கமுற்றுப் பொன்னை உருக்கி வார்த்தாற்போலும் தேமலும் மெல்விரலையும்பல்கால் கடித்ததால் மழுங்கிய பற்களையும் உடையவளாய் நின்னைப் பற்றி அலர் தூற்றும் ஊரெங்கும் நின்னைக் காணச் செல்வாளானாள். அப்படிப்பட்டவள் புதல்வற் பயந்த என்னைப்போல மனையின்கண் நின்னைப் பிரிந்து தங்கியிருக்க என்ன கடப்பாடுடையள் ஆவாள்? |
1. உரை-நின்குறையையுரை |
2. பொருள் : தலைவ! நின்பிரிவால் நெகிழும் தொடியுடைய பரத்தையர் முலையிடைப் புணர்ந்ததனால் அழகிழந்தநின் கண்ணி நின் பரத்தமையை எமக்குச் சொல்லாதபொழுது, நீ பரத்தமையால் எமக்குத் துன்பம் செய்கின்றாய் என்று நின்னிடம் சொல்வார் இல்லையென்றால் ‘யான் தீதிலேன் என்று சொல்லித் |