பக்கம் எண் :

கற்பியல் சூ.687
 

தந்தையர்     ஒப்பர்  மக்கள்1  என்பதனால்  அந்தமில்  சிறப்பின்  மகப்பழித்து  நெருங்கினும்
என்பது-தந்தையரை மக்கள் ஒப்பர் என்பதனால் அந்தமில்லாத சிறப்பினையுடைய மக்களைப் பழித்தற்
கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.
  

“மைபடு சென்னி மழகளிற்றோடை” என்னும் மருதக்கலியுள் (86)  

“வீதல் அறியா விழுப்பொருள் நச்சியார்க்கு
ஈதன் மாட்டொத்தி பெரும மற்றொவ்வாதி
மாதர் மெல்நோக்கின் மகளிரை நுந்தைபோல்
நோய்கூர நோக்காய் விடல்”
2

  

எனவரும்.  


நம்மை    விட்டுப்     பரத்தையர்    சேரியனாய்    நமக்குச்    சேயனாய்   நின்று
‘ஏனாதிப் பாடியில் உள்ளேம் என்று தலைவனையும் சேர்த்துக் கூறினான். நாம் புதல்வன் 
நமக்குத் தலைவன் பிரிவில் ஆறுதலாய்  இருத்தலைப்  பாராட்டிக்  கூறிக் கொண்டிருக்க 
இவன், நாம் தோளில் சேர்த்து  அணைத்திருக்கவும்  அத்தா அத்தா என அடுத்தடுத்துக் 
கூறுகின்றான். அவ்வாறு கூறுவதைத் தன்  வாயிலிருந்து நீக்காதவனாகின்றான்.  இதற்குக் 
காரணம் என்னை? (தலைவன்  தலைவிக்குப் பின்புறமாக வந்து நின்றான். அதை அறிந்த 
புதல்வன்  அத்தா  அத்தா எனக் கூறினான். தோழி அறிந்திருந்தும் தலைவன் குறிப்பால் தலைவிக்கு அவன் வரவைக் கூறவில்லை. அதனால்தான் தலைவி தோழியிடம் அவ்வாறு கூறினாள்.)
  

தோழியின் குறிப்பாலும் புதல்வன் அத்தா அத்தா என்றதாலும் தலைவன் வரவையறிந்த 
தலைவி மீண்டும்  தோழியிடம்  பகைவரிடத்துப்  படைக்கலங்களைச்  சேரவிடுவது போல 
நம்மை யிகழ்தற்கே இவர் வந்தார்; நம்பால் அன்பு கொண்டு வந்தாரல்லர் என்று தலைவன் 
கேட்பக் கூறினாள்.
  

1. தந்தையை ஒப்பர் மக்கள் என்பது அக்காலப் பழமொழி.
  

2. பொருள் : பெரும!  (மகனே!)  தன்னையுடையார் கெடுதலல்லது தான்கெடாத பொருளைப் 
பிறர்க்குக்  கொடுக்கும்  குணத்தினளவில்  நீ  நின்  தந்தையையொப்பாயாக.  காதலுடைய 
நோக்கினையுடைய   மகளிரை   அவர்  நோய்மிகும்படியாக   நின்   தந்தை  நோக்காது 
விடுதல்போலும்
 குணத்தில் நீயும் மகளிரை நோய்மிக நோக்காது விடுதலை ஒழிவாயாக.