பக்கம் எண் :

கற்பியல் சூ.691
 

கரந்தியான் அரக்கவும் கைநில்லா வீங்கிச்
சுரந்த என் மென்முலைப் பால்பழு தாகநீ
நல்வாயிற் போத்தந்த பொழுதினான் எல்லா
கடவுட் கடிநகர் தோறும் இவனை
வலங்கொளீஇ வாவெனச் சென்றாய் விலங்கினை
ஈரமிலாத இவன்தந்தை பெண்டிருள்
யாரில் தவிர்ந்தனை கூறு;
நீருள் அடைமரை யாயிதழ்ப் போதுபோற்கொண்ட
குடைநிழல் தோன்று நின் செம்மலைக் காணூஉ
இவன்மன்ற யான்நோவ உள்ளங்கொண்டுள்ளா
மகனல்லான் பெற்ற மகனென் றகனகர்
வாயில்வரை இறந்து போத்தந்து தாயர்
தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன் மற்றவர்
தத்தம் கலங்களுட் கையுறை என்றிவற்கு
ஒத்தவை ஆராய்ந்தணிந்தார் பிறன்பெண்டிர்
ஈத்தவை கொள்வானாம் இஃதொத்தன் சீத்தை
செறுதக்கான் மன்றபெரிது,
சிறுபட்டி, ஏதிலார் கைஎம்மை எள்ளுபு நீதொட்ட
மோதிரம் யாவோயாங் காண்கு
அவற்றுள் நறாஇதழ் கண்டன்ன செவ்விரற்கேற்பச்
சுறாவேறெழுதிய மோதிரம் தொட்டாள்
குறியறிந்தேன் காமன் கொடியெழுதி என்றுஞ்
செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பிற்
பொறியொற்றிக் கொண்டாள்வல் என்பது தன்னை
அறீஇய செய்தவினை
  


நினக்கு இட்டதன் நோக்கம் இதனைவேறொன்றால் ஒற்றி அதை நின்மார்பில் ஒற்றி நானும் 
அங்கு வருவேன் என எனக்கு அறிவிக்கவேயாம்  என்றாள். பின் மகனைப் பார்த்து நீயும்
அப்படி எம்மை  இகழ்பவனோ  தான்  என்றாள்.  பின்  தன்  மனதில்  இதுவும்  நமக்கு 
வேண்டுவதே என்றாள். பின் சேடியிடம்  வெந்த  புண்ணில்  வேலெறிந்ததுபோல்  இவன்
தந்தை  தொடியையும் இவன்  கையில் அணிந்தவள்  யாவள்?  என்னைப்போலவே இவள்
அழகைக் காண்க பிறரும் என்று தன்னைப் புகழும்  ஒருத்தி   இத்தொடியைத்   தந்தாளா,
யார்கூறு.  அஞ்சாதே   மகனே,   நீயும்   குற்றமுடையையல்லன்:  இத்தொடியை  இட்ட
அப்பரத்தையரும்  தவறுடையரல்லர்.  வேனிற்  புதுப்புனல்போல்  யாவர்க்கும் பயன்படும்
இவன்  தந்தையையும்  நோவார்  இல்லை. இத்தொடியை இவன் கைத்தந்தவர் யார் என்று
வினாவும் யானே தவறுடையேன் என்றாள்.