அன்னையோ, இஃதொன்று முந்தை கண்டும் எழுகல்லா தென்முன்னர் வெந்தபுண் வேலெறிந் தற்றா இஃதொன்று தந்தை இறைத்தொடி மற்றவன் தன்கைக்கண் தந்தாரியார் எல்லா இது என்னொத்துக் காண்க பிறரும் இவற்கென்னும் தன்னலம் பாடுவி தந்தாளா நின்னை இதுதொடு கென்றவர் யார். அஞ்சாதி, நீயுந் தவறிலை நின்கை இதுதந்த பூவெழில் உன்கண் அவளுந் தவறிலள் வேனிற் புனலன்ன நுந்தையை நோவார்யார் மேனின்றும் எள்ளி இது இவன் கைத்தந்தாள் தானியாரோ என்று வினவிய நோய்ப்பாலேன் யானே தவறுடையேன்.” |
எனவரும். |
தன்வயிற் சிறப்பினும் அவன் வயிற் பிரிப்பினும் இன்னாத் தொல்சூள் எடுத்தற் கண்ணும் என்பது-தன் மாட்டு நின்ற மிகுதியானும் அவன் மாட்டு நின்ற வேறுபாட்டானும் இன்னாத பழைய சூளுறவைத் தலைவியெடுத்த வழியும் கூற்று நிகழும் என்றவாறு. |
தலைமகள் மாட்டு மிகுதி யாதோவெனின், “மனைவி உயர்வுங் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியுள் உரிய.” |
(பொருளியல்-32) |
என்றாராகலான், அக்காலத்து மிகுதியுளதாம் |
“தேர்மயங்கி வந்த தெரிகோதை அந்நல்லார் தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர் மயங்கி நீயுறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு”1 |
(கலித்-88) |
எனவரும். |
|
1. பொருள் : தலைவ! நீ தேரில் வரக்கண்டு மயங்கிய மாலையணிந்த அப் பரத்தையரின் மாலையினை நின் மாலையாக மயங்கி அணிந்து வந்த நின் தவறுக்கு அஞ்சி யாம் ஊடிய போரில் கலங்கி இப்போது செய்யும் பொய்ச்சூளுறவு வருத்தம் செய்யின் எம்மேலன்றி யார் மேல் வருத்தம் செய்யும்? இவ்வாறு கூறி ஊடல் தீர்ந்தாள். |