பக்கம் எண் :

கற்பியல் சூ.693
 

காமக்கிழத்தி நலம் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும்  என்பது-காமக்கிழத்தி
நலத்தினைப் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு
1.
  

நலம்  பாராட்டுவாள் தலைவி. அவள் பாராட்டுதல்  தீமை  பற்றி வருதலான், அதனாற் சொல்லி
முடிப்பது பிற பொருளாயிற்று.
  

உதாரணம்
  

“காண்டிகும் அல்லமோ கொண்க நின்கேளே
ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினவுவோளே”
1
  

(ஐங்குறு-122)
  

இதனான்,  அவள்  மிக்க  இளமை  கூறித்  தலைவனைப்  பழித்தாளாம். ஒருமுகத்தாற் புலந்தவாறு,
இன்னுந் தலைமகள் நலம் பாராட்டிய வழிக் கூறவும் பெறும்.
  

“அணிற்பல் அன்ன கொங்குமுதுர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச்சேர்ப்ப
இம்மை மாறி மறுமையாயினும்
நீயாகியர் எம் கணவனை
யான்ஆகியர்நின் நெஞ்சு நேர்பவளே”
2
  

(குறுந்-46)
  

எனவரும்.
  

கொடுமை     ஒழுக்கத்துத் தோழிக்குரியவை  வடுவறு சிறப்பின் திரியாமைக் காய்தலும் உவத்தலும்
பெட்டலும்   ஆவயின்   வரூஉம்  பல்வேறு  நிலையினும்  என்பது-தலைவி  கொடுமையொழுக்கத்துத்
தோழிக்குக் கூறுதற்குரியவை குற்றமற்ற சிறப்பினையுடைய கற்பின்கண் திரியாது தலைவனைக் காய்தலும்
உவத்தலும் நீக்கி நிறுத்தலும் பேணிக்கோடலும்
  


1. காமக்கிழத்தியின்  நலத்தைப்  பாராட்டுவது போன்ற-ஆனால் தலைவனின்  புறத்தொழுக்கமாகிய
தீமையை முடித்துக் காட்டும் செயலில் கூற்று நிகழும்.
  

2. பொருள் : கடற்கரைத்  தலைவ!  இப்பிறப்பு நீங்கி மறுபிறப்பு எமக்கு வரினும் எம் கணவனாக 
நீயே ஆகுக.  ஆனால்  நின்  நெஞ்சுக்கு  ஏற்றவளாக  யானே  ஆகுக.  இது  என் விருப்பம்
(எம் என்றது பரத்தையையும் தன்னையும்).