பக்கம் எண் :

98தொல்காப்பியம் - உரைவளம்
 

எனவரும்.1
  

வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக் கிழவோள் செப்பல் கிழவதென்ப என்பது-வாயில்கள்
மாட்டு வரூஉங் கூற்று வகையுளப்படத் தலைவி கூற்று நிகழும் என்றவாறு.
  

வாயில்களாவார்:- பார்ப்பார், பாங்கன், தோழி, செவிலி, பாணன்,  விறலி, இளையர், விருந்தினர்,
கூத்தர், அறிவர், கண்டோர்.
  

இவருள் தோழி வாயிலாதல் மேற்கூறுதலின் ஒழிந்த வாயில்கள் ஈண்டுக் கொள்ளப்படும்.
  

“அன்னாய் இவனோர் இளமாணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே.”
2
  

(குறுந்-33)
  

இது பாணன் வாயிலாக வந்துழிக் கூறியது.
  

“நீகண்டனையோ கண்டோர்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நகையின மொழிமோ
வெண்கோட்டியானை சோணை படியும்
பொன்மலிபாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.”
3
  

(குறுந்-75)
  

இது வருகின்றான் என்ற உழையர்க்குக் கூறியது.  


பறையினை  மாலைக் காலத்து நிலவு வெளிப்படவும் கைவிடாமல் தன்  பாட்டுக் கிடந்து 
உறங்குகின்ற தன் புதல்வனைக் கண்ட அளவிலே தனது பரத்தையரின்  மணமனையினை நினையாதவனாய்த் தங்கினான்.
  

1. என வரும் என்பதை என இப்படியும் வரும் எனக்கொள்க.
  

2. பொருள் : அன்னாய் (தோழீ)  இப்பாணன்  வயது  குறைந்த  மாணாக்கன் போல்வான்.
இரந்துண்ணுதலால் நிரம்பாத  உடம்புடனே தனக்குப்(புதிய) வேற்றூராகிய இவ்வூரிடத்துப்
பெரிய தலைமையுடையான்  போல்  பேசுகின்றான்.  இவன்தன்  ஊர்ப்  பொதுமன்றத்து 
எப்படிப்பட்டவனாய் இருப்பானோ!
  

3. பொருள் : பாணனே! எம் காதலர் வரவை நீ  நேரிற் கண்டாயோ?  அல்லது  பிறர்கூறக்
கேட்டாயோ? பிறர் கூறக் கேட்டாயாயின் யார் வாய்க் கேட்டாய்? யானை சோணையாற்றிற்
படிந்து நீராடும்படியான
 பொன்மலிந்த பாடலி என்னும் ஊரை நீ பெறுவாயாக.