“ஆடியல் விழவின் அழுங்கல் மூதூர் உடையோர் பான்மையிற் பெருங்கைதூவா வறனில் புலத்தி யெல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடாமாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம்பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள் அழுதனள் பெயரும் அஞ்சி லோதி நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள் ஊசல் உறுதொழிற் பூசலூட்டா நயனின் மாக்களொடுகுழீஇப் பயனின் றம்மவிவ் வேந்துடை அவையே.”1 |
(நற்றிணை-90) |
இது பாங்கனைக் குறித்துக் கூறியது. |
“நெய்யுங் குய்யும் ஆடிமையொடு மாசுபட்டன்றே கலிங்கமுந் தோளுந் திதலை மென்முலைத்தீம்பால் பிலிற்றப் புதல்வர்ப்புல்லிப் புனிறு நாறும்மே வாலிழை மகளிர் சேரித் தோன்றும் தேரோற் கொத்தனெம் அல்லேம் இதனாற் பொன்புரை நரம்பின் இன்குரற் சீறியாழ் எழாஅல் வல்லை யாயினுந் தொழாஅல் புரையோரன்ன புரையுநட்பின் இளையோர் கூம்புகை மருள்வோர் ஆங்குக் கொண்டுசெல் பாணநின் தண்துறையூரனைப் பாடுமனைப் பாடல் கூடாது நீடுநிலைப் |
|
1. பொருள் : தோழீ! விழவொலியுடைய மூதூரில் ஆடையொலிக்கும் புலைத்தி (வண்ணாரப் பெண்) இரவில் கஞ்சியிட்டுக் காயவைத்ததான. தான் உடுத்திய ஆடையொடு வாடாமாலையும் அசையப் பெண்மைக் குணங்களால் வறிய பரத்தையருள் பெதும்பைப் பருவத்தாள் ஒருத்தித் தோழியர் ஆட்டவும் ஊஞ்சல் ஆடாளாய் அழுது நீங்க அவளை ஊஞ்சலில் ஆடும்படிச் செய்து நலம்பெறாத இப்பாணனின் அவையோர் எப்பயனும் செய்திலர். அதனால் இப்பாணன் அவள் ஊடல் நீங்காமையால் நம்மிடம் தலைவனால் அனுப்பப்பட்டு இங்கு வந்தான். |