பக்கம் எண் :

242தொல்காப்பியம் - உரைவளம்
 

எனப் பாசறைக் கண் தலைவற்குத் தலைவி வருத்தங் கூறியவாறு காண்க.
 

நச்
 

இஃது அதிகாரப்பட்ட கூத்தரோடு பாணர்க்கும் உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.
  

இதன் பொருள்: நிலம்  பெயர்ந்து  உறைதல்  வரைநிலை  உரைத்தல்  -  தலைவன்    சேட்புலத்துப்
பிரிந்துறைதலைத்    தலைவிக்காக   வரைந்து   மீளும்  நிலைமை  கூறுதல்,  கூத்தர்க்கும்    பாணர்க்கும்
யாத்தவை உரிய-கூத்தர்க்கும் பாணர்க்கும் யாப்ப மைந்தன உரிய என்றவாறு.
 

யாப்பமைதலாவது  : தோழியைப் போலச் செலவழுங் குவித்தல் முதலியன பெறாராகலின்  யாழெழீஇக்
கடவுள் வாழ்த்தி அவளது  ஆற்றாமை  தோற்றும் வகையான் எண்வகைக்   குறிப்பும்பட நன்னயப்படுத்துத்
தலைவற்குக் காட்டல் போல்வன.
 

உதாரணம்
 

“அரக்கத்தன்ன செந்நிலப் பெருவழிக்
காயாஞ் செம்மறாஅய்ப் பலவுட
னீயன்மூதாய் வரிப்பப் பவளமொடு
மணிமிடைந்தன்ன குன்றங்கவைஇய
வங்காட்டாரிடை மடப்பிணை தழீஇத்
திரிமருப்பிரலை புல்லருந்துகள
முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்
குறும்பொறை மருங்கினறும் பூவயரப்
பதவு மேயலருந்து மதவுநடை நல்லான்
வீங்குமாண் செருத்த றீம்பால் பிலிற்றக்
கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரு
மாலையுமுள்ளா ராயிற்காலை
யாங்கா குவங்கொல் பாணவென்ற
மனையோள் சொல்லெதிர் சொல்லல் செல்லேன்
செவ்வழி நல்யா ழிசையினென் பையெனக்
கடவுள் வாழ்த்திப் பையுண் மெய்நிறுத்
தவர்திறஞ் செல்வேன் கண்டனென்யானே


சேராத  பகைவர்  போலப்  பெரிதும்  வருந்தினாள்.  அவள் அழகு பெற நீ நின் தேரை அவள் பால்
செலுத்துவாயாக. - பாணன் கூற்று.