பக்கம் எண் :

258தொல்காப்பியம் - உரைவளம்
 

பெண்ணொடு புணரார் என்னல் வேண்டுவதன்று ஆதலின் அவ்வுரை பொருந்தாது.
  

இனி     நச்சினார்க்கினியர்,  ‘பெண்ணொடு  புணரார்’  என்பதற்குத்  “தலைவியரோடு  தலைமகனைக்
கூட்டிப்  புலனெறி  வழக்கம்  செய்யார்”  எனப்  பொருள்  கூறியதும்   சிறவாது.  ஏன்எனின்  புலனெறி
(செய்யுள்)  வழக்கம்  செய்யார்  என்பதனால்  உலகியலில்  மகளிரொடு   பாசறைச்   செல்வர்   என்பது
பெறப்படும் ஆதலின்,
  

புறனடை
  

174.

புறத்தோர் ஆங்கண் புணர்வதாகும்1.(35)
 

இளம்.
  

இது, மேலதற்குப் புறனடை.
  

இ-ள்:மேற்சொல்லப்பட்ட பாசறைக்கட் புறப்பெண்டிர் புணர்ச்சி பொருந்துவது என்றவாறு.
  

பொருந்துவது என்றதனாற் கூட்டமென்று கொள்க. அவராவார் தாதியருங் கணிகையரும்.
  

நச்.
  

இஃது எய்தியது இகந்துபடாமற் காத்தது.
  

இ-ள் :   புறத்தோர்  ஆங்கண்-அடியோரும்  வினைவலபாங்கினோருமாகிய  அகப்புறத் தலைவருடைய
பாசறையிடத்தாயில்;  புரைவது  என்ப-அவரைப்  பெண்ணொடு  புணர்த்துப்  புலனெறி  வழக்கஞ்  செய்தல்
பொருந்துவது என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
  

இப்பாசறைப்   பிரிவை   வரையறுப்பவே   ஏனைப்   பிரிவுகளுக்குப்   புணர்த்தலும்   புணராமையும்
புறத்தோர்க்கு வரைவின்றாயிற்று.


1.  புரைவதென்ப-நச். பாடம்.
புறத்தோர் அகனைந்திணைக்குப் புறம்பானோர் என்பர் நச்.