பக்கம் எண் :

கற்பியல் சூ.36261
 

“வேனிலுழந்த வறிதுயங்கோய்களிறு
வானீங்கு வைப்பின் வழங்காத்தேர் நீர்க்கவாஅம்
கானங் கடத்திர் எனக்கேட்பின் யானென்
றுசாவுகோ ஐயசிறிது”
   

“நீயே, செய்வினை மருங்கிற் செலவயர்ந்தியாழநின்
கைபுனை வல்வில் ஞாணுளர் தீயே
இவட்கே, செய்வுறு மண்டில மையாப்பதுபோல்
மையில் வாள்முகம் பசப்பூரும்மே”
   

“நீயே, வினைமாண் காழகம் வீங்கக்கட்டிப்
புனைமாண் மரீஇய அம்பு தெரிதியே
இவட்கே சுனைமாணீலங் காரெதிர் பவைபோல்
இனைநோக் குண்கண்நீர் நில்லாவே”
   

“நீயே, புலம்பின் உள்ளமொடு பொருள்வயிற் செலீஇய
வலம்படு திகிரி வாய்நீவுதியே
இவட்கே, அலங்கிதழ்க் கோடல்வீயுகுபவைபோல்
இலங்கேரெல்வளை இறையூரும்மே”
   

என நின்
  

“சென்னவை யரவத்து மினையவள் நீநீப்பின்
தன்னலங் கடைகொளப்படுதலின் மற்றிவள்
இன்னுயிர் தருதலும் ஆற்றுமோ
முன்னிய தேஎத்து முயன்றுசெய் பொருளே”
1
  

(கலித்-7)


1 பொருள் : தலைவ!  வேனிற்காலத்தால் உடல் சிறிதாகி வருந்தி  ஓய்ந்த களிறு, மழையற்ற இடங்களில்
ஊராத   பேய்த்தேரை   நீர்  என்று  அவாவும்படியான  காட்டிடத்துச்  செல்வீர்  என யான் கூறக்
கேட்பாளாயின் அவளுக்கு நிகழ்வதொன்றை யான் நின்னிடத்து உசாவுவேன்.
  

நீ,  பொருள் ஈட்டும் வினையின்மேற்  செல்ல  விரும்பி   நின்கையிடத்துள்ள  வில்லின் நாணைத்
தடவுகின்றாய்; இவளுக்கோ எனின், ஒளி செய்யும் மதியிடத்து மேகம் பரவுதல் போல முகத்தில் பசப்பு
ஊரா நிற்கும்.
  

நீ,  தொழிற்பாடு  அமைந்த ஆடையை இறுகக்  கட்டி  அம்புகளை ஆராய்கின்றாய்;  இவளுக்கோ
எனின், நீலமலர் நீர்த்துளியை ஏற்பது போலக் கண்கள் நீர் சொரிதலை நில்லாவாயின.
  

நீ,  பிரிவதால்   தனிமை   என்பதில்லாத    உள்ளமொடு    பொருளீட்டச்     செல்வதற்காகத் 
தேர்ச் சக்கரத்தின்