பக்கம் எண் :

262தொல்காப்பியம் - உரைவளம்
 

கிழவோன்   குறிப்பினை   யெடுத்துக்   கூறலும்  என்பது-தலைவன்  குறிப்பினைத்  தலைவிக்கு விளங்கக்
கூறலும் என்றவாறு,
  

ஆவொடுபட்ட   நிமித்தங்    கூறலும்   என்பது-ஆவொடுபட்ட   நிமித்தங்   கூறுதலும்   என்றவாறு.
‘பட்டநிமித்தம்’ என்றதனால் எல்லா நிமித்தமுங் கொள்க.
  

செலவுறு  கிளவி   என்பது-செலவுற்ற   சொல்லும்  ன்றவாறு. அஃதாவது தலைமகன் போயினான் என்று
கூறுதல். இவற்றிற்கு இலக்கியம் வந்தவழிக் காண்க.
  

செலவழுங்கு கிளவி என்பது - செலவழுங்கல் வேண்டுமெனக் கூறுதல்.
  

உதாரணம்
  

*”நடுவிகந் தொரீஇ நயனில்லான் வினைவாங்கக்
கொடிதோர்த்த மன்னவன் கோல்போல ஞாயிறு
கடுகுடி கதிர்மூட்டிக் காய்சினந் தெறுதலின்
உறலூறு கமழ்கடாஅத் தொல்கிய எழில்வேழம்”
   


வாயைத் துடைக்கின்றாய்;  இவளுக்கோ எனின், விளங்கும் கோடற்பூக்கள் காம்பிற்று. வீழ்பவை  போல
வளையல்கள் முன்கைகளினின்று வீழ்வனவாயின.
  

இப்படியாக   நீ  பொருள் வயிற்பிரிகின்றாய் என்னும்  சொல்லளவிலே  தன்  அழகு  இறந்துபடும்
காலத்தைப் பெறப்படுதலின் நீ விரும்பிய தேசம் சென்று ஈட்டும் பொருள் இவள் உயிரைத் தருமோ.
 

* கருத்து ; இரக்கமற்ற அமைச்சன் அருளின்றி ஒரு  தீவினையைக்கூற    கொடுமையையே   நினைத்த
அரசன்  அது  கேட்டுச் செயல்படும்  கொடுங்கோல்   போல   ஞாயிறு   காய,   தளர்ந்த  வேழம்
கலப்பையுழுவது போலத்  தன்  மருப்பை  நிலத்தூன்றிச் சோரும்படியான மலைவெந்த  போக்குவரவு
அற்ற கொடிய பாலை வழியில் கடந்து செல்லத் துணிந்த நுமக்கு ஒன்று சொல்வேன்.
 
  

கேட்பார்க்குப் பயன்தருவதாய் விரல் கவர்ந்து ஒலிக்கும்  யாழ்  நரம்பின் இடைநரம்பு இறுமானால்
ஓசை நிலையில்லாத யாழ்போல நிலையற்ற பொருளை விரும்புவரோ அறிந்தோர்?
 
  

தம்மைத் தேடிக்  கொண்டவரை கொண்ட காலத்து மகிழ்வுடன் இருக்கச் செய்தது போலின்றித் தாம்
கெடுங்காலத்துப்  பிறர் எல்லாம் எள்ளும்படிப் போம்   பொருளினும்   நிலையில்லாத   செல்வத்தை
விரும்புவரோ அறிந்தோர்?