பக்கம் எண் :

கற்பியல் சூ.36263
 

வறனுழு நாஞ்சில் போல் மருப்பூன்றி நிலஞ்சேர
விறன்மலைவெம்பிய போக்கறு வெஞ்சுரஞ்
சொல்லா திறப்பத் துணிந்தனிர்க் கொருபொருள்
சொல்லுவ துடையேன் கேண்மின் மற்றைஇய.,
   

“வீழுநர்க் கிறைச்சியாய் விரல்கவர் பிசைக்குங்கோல்
ஏழுந்தம் பயன்கெட இடைநின்ற நரம்பறூஉம்
யாழினும் நிலையிலாப் பொருளையும் நச்சுபவோ”
   

“மரீஇத்தாங் கொண்டாரைக் கொண்டக்காற்போலாது
பிரியுங்காற் பிறரெள்ளப் பீடின்றிப் புறமாறும்
திருவினு நிலையில்லாப் பொருளையு நச்சுபவோ”
   

“புரைதவப் பயனோக்கார் தம்மாக்கம் முயல்வாரை
வரைவின்றிச் செறும்பொழுதில் கண்ணோடா துயிர்வௌவும்
அரைசினும் நிலையிலாப் பொருளையும் நச்சுபவோ
 
எனவாங்கு
நச்சல் கூடாது பெரும இச்செல
வொழிதல் வேண்டுவல் சூழிற் பழியின்று
மன்னவன் புறந்தர வருவிருந்தோம்பிக்
தன்னகர் விழையக் கூடின்
இன்னுறழ் வியன்மார்ப அதுமனும் பொருளே”
  

(கலித்-8)
 

எனவரும்.
  

இவை  பார்ப்பார்க்குரிய  வென்றவாறு.  ‘ஒருபாற்  கிளவியேனைப்  பாற்  கண்ணும்’  (பொருளியல்-27)
வரும் என்பதனால் தோழி மாட்டும் பாங்கன் மாட்டும் கொள்க.
  


தமக்குவரும்  ஆக்கத்தைப்  பாராமல் தம்மரசர் ஆக்கத்துக்கே  முயலும் அமைச்சரை, அளவின்றிக்
கோபிக்கும்  போது, இரக்கம் காட்டாது அவர் உயிரையும் வவ்வும் அரசைக் காட்டிலும் நிலையில்லாத
பொருளை விரும்புவரோ அறிவுடையார்?
 
  

தலைவ! நீ  பொருளை நச்சுதல் கூடாது. நீ பிரிந்து செல்லுதலைத்தவிர்த்தலை  யான் விரும்புவேன்.
அரசன் காக்க, வருவிருந்தினரைப் பேணித் தன் வீட்டில் மனைவி  விரும்பக்  கூடியுறையின்  அதுவே
நிலைத்த பொருளாகும்.