பக்கம் எண் :

கற்பியல் சூ.41273
 

இ-ள்;   தலைவன் கூறியவழி எதிர் கூறுதல் பாங்கற்கு உரித்து என்றவாறு, எதிர்கூறுதலாவது மாறுபடக்
கூறுதல்  அவை களவுக்காலத்துக் கழறலுங் கற்புக்  காலத்துப் பரத்தையிற் பிரிவிற்கு  உடம்படாது  கூறலும்
இவை போல்வனவும்.
  

உதாரணம்
  

“காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலும் தணித்தலும் இன்றே யானை
குளகுமென்று ஆள்மதம் போலப்

பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே”
1
   

(குறுந்-136)
 

என்றும்.
 

“பொருள் பொருளார்ப் புன்னலந் தோயார் அருள் பொருள்
ஆயும் அறிவி னவர்”2

(குறள்-314)
 

என்றும் வரும்.
  

நச்
  

இது, மேற் பார்ப்பார்க்குரியன பாங்கற்குமாமென எய்து வித்ததனை ஒருமருங்கு மறுக்கின்றது.
  

இதன்  பொருள் : மொழியெதிர்  மொழிதல்-பார்ப்பானைப்  போலக்  காமநிலையுரைத்தல் போல்வன
கூறுங்கால்  தலைவன்  கூறிய  மொழிக்கு  எதிர்  கூறுதல்,   பாங்கற்கு   உரித்து  -பாங்கனுக்கு  உரித்து
என்றவாறு.
  

இது  களவிற்கும்  பொது!  அது  பாங்கற்  கூட்டத்துக்  காண்க.  கற்பிற் புறத்தொழுக்கத்துத் தலைவன்
புகலாமற் கூறுவன
  


1 பொருள்  : உலகர் தீயதுகண்டு அஞ்சுமாறு போலக் காமம் காமம் எனக் கூறுவர். காமமானது பேயும்
இல்லை;  நோயும்  இல்லை.  கூரியதாகி  பெருகுவதும் சுருங்குவதும்  இல்லை. குளவி என்னும் இரை
தின்றபோது  யானைக்கு  மதம்  வெளிப்படுவதுபோலக் காமமும்  ஒருகாலத்தில் வெளிப்படும்பாங்கும்
உடையது. இது அறியும் ஆற்றலுடையாரைப் பெறின் புலப்படும்.
  

2 பொருள்  : அருளாகிய சிறப்புப் பொருளை ஆராயும் பெரியோர் பொருளையே பொருளாகக் கருதும்
வரைவின் மகளிரின் புல்லிய அழகைப் புணரார்.