தலைவன் வன்புறை |
182. | துன்புறு பொழுதினும் எல்லாங் கிழவன் வன்புறுத் தல்லது சேறல் இல்லை. | (43) |
|
பி.இ.நூ. |
நம்பியகம் 88 |
இளம். |
இது தலைவற் குரியதோர் மரபு உணர்த்திற்று. |
இ-ள்: துன்புறு பொழுதினும் எல்லாப் பிரிவினும் தலைவன் தலைவியை வற்புறுத்தியல்லது சேறல் இல்லையென்றவாறு |
துன்புறு பொழுதாவது களவுக்காலம். களவினும் கற்பினும் பொது என்றவாறு. |
நச். |
இது, முன்னர்க் கிழவி முன்னர் (181) என்பதனாற் குறிப்பினான் ஆற்றுவித்துப் பிரிதல் அதிகாரப்பட்டதனை ஈண்டு விளங்கக் கூறி வற்புறுத்துமென்கின்றது. |
இதன் பொருள்: துன்பு உறுபொழுதினும் உணர்த்தாது பிரிந்து தலைவி துன்பம் மிக்க பொழுதினும் உம்மையான் உணர்த்திப் பிரிந்து துன்பம் மிகாதபொழுதினும், எல்லாம் சுற்றமுந்தோழியும் ஆயமுந் தலைமகள் குணமாகிய அச்சமும் நாணமும் மடனுமாகியவற்றையெல்லாம், கிழவன் வன்புறுத்து அல்லது சேறல் இல்லை-தலைவன் வலியுறுத்து அல்லது பிரியான் என்றவாறு. |
எனவே இவற்றை முன்னர் நிலைபெறுத்திப் பின்னர்ப் பிரியுமாயிற்று. செல்லாது பிரியுங்கால், போழ்திடைப்படாமன் முயங்கியு மதன்றலைத் தாழ்கதுப் பணிந்து முள்ளுறழ் முளையெயிற் றமிழ்தூறுந் தீ நீரைக் கள்ளினு மகிழ் செய்யுமெனவுரைத்தும் (கலி-4) இவை முதலிய தலையளி செய்து, தெருட்டிப்பிரிய அவை பற்றுக்கோடாக ஆற்றுதலின் அவள் குணங்கள் வற்புறுத்துவன ஆயின. |
இனி உலகத்தார் பிரிதலும் ஆற்றியிருத்தலுமுடையரென உலகியலாற் கூறலும் பிரிவுணர்த்திற்றேயாம். இனிப் பிரிவினை விளங்கிக் கூறி ஆற்றியிருவென்றலும் அவற்றை வற்புறுத்தலாம் |