பக்கம் எண் :

கற்பியல் சூ.20229
 

“கடைஇய நின்மார்பு தோயல மென்னு
மிடையுநிறையு மெளிதோநிற் காணிற்
கடவு புகைத்தங்கோ நெஞ்சென்னுந் தம்மோ

டுடன்வாழ் பகையுடையார்க்கு”
1

 

என்புழி,  நிற்காணிற்  கடவுபு   கைத்தங்கா  நெஞ்செனவே  அவன்  ஆற்றாமை கண்டருளி நெஞ்சு ஏவல்
செய்ததென வேறொர் பொருள் பயப்பக் கூறித் தன் அன்பினைக் கரந்தவாறு காண்க.
 

‘கூர்முண்முள்ளி’     (அகம்  -26)   என்பதனுட்   ‘சிறுபுறங்கவையினன்’   என   அவன்   வருந்தியது
ஏதுவாகத்தான் ‘மண்போன் நெகிழ்ந்தேன்’   என   அருண் முந்துறுத்தவாறும், ‘இவை பாராட்டிய பருவமும்
உள’  என  அன்பு    பொதிந்து    கூறியவாறும்,  ‘ஆண்டும்  பணிந்த மொழி வெளிப்படாமல் நெஞ்சறை
போகிய அறிவினேற்கு’ எனத் தன் அறிவினை வேறாக்கி அதன் மேலிட்டுக் கூறியவாறுங் காண்க.
 

அலர்
 

160.

களவும் கற்பும் அலர்வரை வின்றே.
 
(21)

இளம்.
 

என் - எனின், அலர் ஆமாறு உணர்த்திற்று.
 

இ-ள் களவினுங் கற்பினும் அலராகுமென்று கூறுதல் வரைவின்று என்றவாறு.
 

‘தொகுத்துக் கூறல்’ என்பதனாற் களவும் ஈண்டு ஓதப்பட்டது.
 

உதாரணம்
  

“கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னுந்
திங்களைப் பாம்பு கொண்டற்று”
2

(குறள் - 1146)

1 பொருள்:   நின்னைக் காணின் என்னை நின்னிடத்தே செலுத்திதானும் என்னிடம் தங்காது நின்னிடம்
சேர்ந்து  வருந்தும் நெஞ்சம் என்னும் உட்பகையுடையார்க்கு (எனக்கு) என்னைத் தன்பால் சேரும்படிச்
செலுத்திய  நின்மார்பை இனித்தோயேம் என்று எண்ணும் குணமும் எளிதாக அமையுமோ? அமையாது
அன்றோ -இவ்வாறுகூறி ஊடல் தீர்ந்தாள் தலைவி என்க.

2 பொருள்: அவரைப் பார்த்தது ஒரு நாளில்தான்; ஆனால்