பக்கம் எண் :

230தொல்காப்பியம் - உரைவளம்
 

இது களவு.
 

“வேதின வெரிநின் ஓதிமுதுபோத்
தாறுசெல்மாக்கள் புட்கொளப் பொருந்துஞ்
சுரனே சென்றனர் காதலர் உரனழிந்
தீங்கியான் அழுங்கிய எவ்வம்

யாங்கறிந்தன்றிவ் அழுங்கலூரே”
1

(குறுந்-140)
 

இது கற்பு.
 

நச்
 

இதுவுந் தலைவிக்குந் தோழிக்கும் உரிய கூற்றுக் கூறுகின்றது.
 

இதன்  பொருள்:  களவின்  கண்ணுங்  கற்பின் கண்ணும் அலரெழுகின்றதென்று  கூறுதல் தலைவிக்குந்
தோழிக்கும் நீக்கு நிலைமையின்று என்றவாறு.
 

‘வரைவின்று’     எனப்   பொதுப்படக் கூறினமையான் இருவரையுங்   கொண்டாம். தலைவன் ஆங்குக்
கூறுவனாயிற்  களவிற்   கூட்டமின்னையுங் கற்பிற் பிரிவின்மையும் பிறக்கும்.  ஒப்பக்கூறல்  (666)  என்னும்
உத்தி  பற்றிக் களவும்   உடனோதினார் சூத்திரஞ் சுருங்குதற்கு. ‘களவலராயினும்’ (115)  எனவும்,  ‘அம்பலு
மலரும்’  (139)  எனவும்    களவிற்  கூறியவை  அலராய்  நிகழ்ந்தவழி  வேறு  சில  பொருண்மை பற்றிக்
கூறுதற்கு வந்தன. அவை  அலா கூறப்பெறுப என்றற்கு வந்தனவன்றென உணர்க.

 

உதாரணம்
  

“கண்டது மன்னுமொரு நாளலர்மன்னுந்
திங்களைப் பாம்பு கொண்டற்று”
2

(குறள் - 1146)
 

இது களவு.


அதனால் வந்த அவச் சொல் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போலப் பலராலும் அறியப்பட்டது.

1 பொருள்:     ஈர்வாள்  போலும் முகுபுறம் உடைய ஆண் ஓந்தியானது வழிப்போம் மக்களுக்கு நல்ல
நிமித்தமாக அமையும் சுரவழியே காதலர் சென்றனர். அதனால் என் வலியழிந்து இங்கு யான் கொண்ட
துயரத்தை இவ்வூரார் எவ்வாறு அறிந்தனரோ?

2 பொருள்: பக்கம் 299-30ல் காண்க.