பக்கம் எண் :

கற்பியல் சூ.21231
 

“வேதினவெரிநி னோதி முதுபோத்
தாறு சென்மாக்கள் புட்கொளப் பொருந்துஞ்
சுரனே சென்றனர் காதலருரனழிந்
தீங்கியான்றாங்கிய வெவ்வம்

யாங்கறிந்தன்றிவ் வழுங்கலூரே”
1

(குறுந்-140)
 

இது கற்பு,
 

“கரும்பினெந்திரங் களிற்றெதிர் பிளிறுந்
தேர்வண்கோமான் றேனூரன்ன விவ
ணல்லணி நயந்துநீ துறத்தலிற்

பல்லோரறியப் பசந்தன்று நுதலே”
2

(ஐங்குறு-55)
 

இது தோழி அலர் கூறியது.
 

161.

அலரில் தோன்றும் காமத்து மிகுதி.3 (22)
 

இளம்
 

உதாரணம்
 

“ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும் இந்நோய்”
4

(குறள்-1147)
 

எனவரும்.
 

நச்
 

இஃது, அலர் கூறியதனாற் பயன் இஃது என்கின்றது.

இதன் பொருள்:- அலரில் தோன்றுங் காமத்து மிகுதி இரு


1 பொருள் பக்கம் 230 ல் காண்க.

2 பொருள்:     கரும்பாலையானது  யானையின்  பிளிறலோடு  எதிர்த்துப் பேரொலியெழுப்பும்படியான
தேர்வண்கோமானது  தேனூர் போலும் இவளது நல்ல அழகினை விரும்பிப் பின் துறத்தலினால் இவள்
நுதல் பலரும் அறியும்படியாகப் பசந்தது.

3 காமத்துச் சிறப்பே பாடம்.

4 பொருள்:  யான் கொண்ட காம  நோயாகிய  பயிரானது ஊரவர் சொல்லும் அலரே எருவாகவும் அது
கேட்டு அன்னை வெகுண்டுரைக்கும் சொல்லே நீராகவும் அமையும் வளரா நிற்கும்.