வகைக் கைகோளினும் பிறந்த அலரால் தலைவற்குந் தலைவிக்குங் காமத்திடத்து மிகுதி தோன்றும் என்றவாறு. |
என்றது, களவு அலராகிய வழி இடையீட்டிற்கு அஞ்சிய அச்சத்தான் இருவர்க்குங் காமஞ் சிறத்தலுங் கற்பினுட் பரத்தைமையான் அலர் தோன்றிய வழிக் காமஞ் சிறத்தலும் அவள் வருந்துமென்று தலைவற்குக் காமஞ் சிறத்தலுந் தலைவன் பிரிவின்கட் டலைவிக்குக் காமஞ் சிறத்தலும் பிறவுமாம். |
உதாரணம் |
“ஊரவர் கௌவையெருவாக வன்னைசொன் னீராக நீளுமிந்நோய்”1 |
(குறள் - 1147) |
“நெய்யாலெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற் காம நுதப்பேமெனல்”2 |
(குறள் - 1148) |
என்றாற்போல்வன கொள்க. |
162. | கிழவோன் விளையாட் டாங்கும் அற்றே. | (23) |
இளம் |
இதுவும் அது. |
(இ-ள்) கிழவோன் விளையாட்டும் காமத்தின் மிகுதியைக் காட்டும் என்றவாறு. |
ஆங்கு - அசை |
“அகலநீ துறத்தலின் அழுதோவா உண்கணெம் புதல்வனை மெய்தீண்டப் பொருந்துதல் இயைபவால் நினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின் தமர்பாடுந் துணங்கையுள் அரவம்வந் தெடுப்புமே”3 |
(கலித் - 70) |
எனவரும். |
1 பொருள்: பக்கம் 231ல் காண்க. 2 பொருள் : அலரால் காமத்தை அவிப்பேம் என்பது நெய்யால் நெருப்பை அவிப்பேம் என்பதுபோலும். 3 பொருள் : தலைவ! நீ எம்மைப்பிரிய அதனால் உறக்கத்தை மறந்த எம் கண்கள், எம் மெய்யானது புதல்வனைத் தீண்டலால் மூடுதலும் (உறங்குதலும்) கூடும்; ஆனால் அதனை, நீ பரத்தையர்க்கு என்று அமைந்த |