பக்கம் எண் :

கற்பியல் சூ.23233
 

விளையாட்டாற் காமமிக்கு உறங்காமை கண்டு கொள்க.
 

நச்
 

இதுவுங் காமச்சிறப்பே கூறுகின்றது.
 

இதன்  பொருள்;   கிழவோன்   விளையாட்டு - தலைவன்   பரத்தையர்  சேரியுள் ஆடலும் பாடலுங்
கண்டுங்  கேட்டும்    அவருடன்   யாறு  முதலியன.   ஆடியும் இன்பம் நுகரும் விளையாட்டின் கண்ணும்,
ஆங்கும் அற்று - அப்பரத்தையரிடத்தும் அலரால் தோன்றுங் காமச் சிறப்பு என்றவாறு.
 

‘ஆங்கும்’     என்ற    உம்மையான்  ஈங்கும்  அற்றெனக்  கொள்க.  தம்மொடு  தலைவன்  ஆடியது
பலரறியாதவழி  யென்றுமாம்.    பலரறிந்தவழி அவனது பிரிவு  தமக்கு இழிவெனப்படுதலின்   அவர் காமச்
சிறப்புடையராம்.  தலைவன்    அவரொடு  விளையாடிய அலர்  கேட்குந்தோறுந் தலைவிக்குப்  புலத்தலும்
ஊடலும்  பிறந்து  காமச்   சிறப்பெய்தும். ஆங்கும் ஈங்குமெனவே அவ்விருவரிடத்துந் தலைவன்    அவை
நிகழ்த்தினானாகலின் அவற்குங்   காமச் சிறப்பு ஒருவாற்றாற்  கூறியவாறாயிற்று.  இது காமக்கிழத்தியரல்லாத
பரத்தையரொடு  விளையாடிய    பகுதியாகலின் வேறு கூறினார்.  காமக்கிழத்தியர்  ஊடலும் விளையாடலுந்
தலைவி    ஊடலும்      விளையாடலும்    ‘யாறுங்    குளனும்’   (191)    என்புழிக்   கூறுப.   அஃது
அலரெனப்படாமையின் விளையாட்டுக் கண்ணென விரித்த உருபு வினைசெய்யிடத்து வந்தது.
 

உதாரணம்
  

“எஃகுடையெழினலத் தொருத்தியொடு நெருநை
வைகுபுனலயர்ந்தனை யென்பவதுவே
பொய்புறம் பொதிந்தயாங் கரப்பவுங் கையிகந்

தலரா கின்றாற்றானே”
1

(அகம் - 116)
 

“தோடுதோய் மலிர்நிறையாடியோரே”

(அகம் - 166)
 

எனத்தலைவியும் பரத்தையும் பிறர் அலர் கூறியவழிக் காமஞ்


இல்லத்தில்  அப்பரத்தையர்  ஆடும்  துணங்கைக்  கூத்தின்  ஆரவாரம் தடுத்துவிடும். இதுவே குறை.
(துணங்கையாட்ட ஒலி தலைவனை நினைப்பித்து அதனால் உறங்காமை வந்தது).

1 பொருள் :  அழகிய  ஒருத்தியுடன்  நேற்றுப்  புனலாடினாய் என்று கூறுவர்! அச்சொல் பொய் என்று
புறம்பே மறைந்து ஒளிக்கவும் எம்மையும் கடந்து அலராகின்றது.