பக்கம் எண் :

கற்பியல் சூ.28243
 

விடுவிசைப் புரவி வீங்குபரிமுடுகக்
கல்பொரு திரங்கும் பல்வாய் நேமிக்
கார்மழை முழக்கிசை கடுக்கும்
முனைநல் லூரன் புனைநெடுந்தேரே”
1

(அகம் - 14)
  

இதனுள்,  தலைவி   இரக்கந்தோன்றக்  கடவுள்  வாழ்த்திப்    பிரிந்தோர் மீள நினையா நின்றேனாக அவர்
மீட்சி கண்டேனெனப் பாணன் கூறியவாறு காண்க.
 

கூத்தர் கூற்று வந்துழிக் காண்க.
 

இளையோர் கூற்று
  

168.

ஆற்றது பண்பும் கருமத்து வினையும்
ஏவல் முடிபும் வினாவும் செப்பும்
ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்
தோற்றம் சான்ற அன்னவை பிறவும்
இளையோர்க் குரிய கிளவி என்ப.
 

(29)

பி. இ. நூ.
 

நம்பியகம் 94, இல. வி. 466.
 

மடந்தை வாயில் வேண்டலும் வாயில்
உடன்படுத் தலுமவள் ஊடல் தீர்த்தலும்
கொற்றவற் காத்தலும் குற்றேவல் செய்தலும்


1 பொருள் : பாணனே? உருக்கி  வார்த்தால்  ஒத்த  செந்நிலப்   பெரிய  வழியிலே காயாவின் வாடிய
மலர்கள்   பரந்து   தம்பலப்   பூச்சிகள்   ஊரஇருக்கும்   காட்சியானது   பவளமொடு நீலமணிகள்
கலந்திருப்பதுபோல    வுள்ள    குன்றத்தில்    பெண்    மானைத்   தழுவி   ஆண் இரலைமான்
அறுகம்புல்லருந்தித்துள்ள,  கோவலர்  பசுக்களை  மேய  விட்டு  நறிய மலர்களைக்  கொண்டு மகிழ,
ஆநிரைகள்   பால்பிலிற்றும்படிக்   கன்றுகளைக்   கூவிக்  கொண்டு தொழுவங்களிற்  புகும்படியான
மாலைக்காலத்தில் அவர் வாராராயின் அக்காலத்தில் யாம் என் செய்வேம் என்று சொல்லும் மனையோள்
சொல்லுக்கு  எதிர்சொல் சொல்லாதவனாய்,  யாழில்  செவ்வழிப்  பண்  இசைத்துக் கடவுள் வாழ்த்தி
அத்தலைவன்பால் செல்லத் தொடங்கினேன்; குதிரை விரைய தேர்ச்சக்கரம்  பாறையிற்பொருது மேகம்
என   ஒலிக்கும்படியான பகைப்புலத்திருந்து  நல்ல  ஊருடையளாகிய  தலைவனின்  தேரை  எதிரே
கண்டேன்யான்.