சென்றுமுன் வரவு செப்பலும் பாசறை ஒன்றிநின் றுரைத்தலும் வினைமுடி புரைத்தலும் வழியியல்பு கூறலும் வழியிடைக் கண்டன மொழிதலும் இளையோர் தொழில்என மொழிப. |
இளம் |
இஃது, இளையோர்க்குரிய கிளவியாமாறுணர்த்திற்று. சூத்திரத்தாற் பொருள் விளங்கும். |
உதாரணம் |
“விருந்தும் பெறுகுநள் போலுந்திருந்திழைத் தடமென் பணைத்தோள் மடமொழி அரிவை தளிரியற் கிள்ளை இனிதின் எடுத்த வளராப் பிள்ளைத் தூவிஅன்ன வார்பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவிற் பறைக்கண் அன்ன நிறைச்சுனைதோறும் துளிபடு மொக்குள் துள்ளுவன சாலத் தொளிபொரு பொகுட்டுத் தோன்றுவனமாய வளிசினை உதிர்த்தலின் வெறிகொள்புதாஅய்ச் சிரற்சிற கேய்ப்ப அறற்கண் வரித்த வண்டுண் நறுவீ துமித்த நேமி தண்ணில மருங்கிற் போழ்ந்த வழியுள் நிரைசெல் பாம்பின் விரைபுநீர் முடுகச் செல்லு நெடுந்தகைதேரே முல்லை மாலை நகர்புகல் ஆய்ந்தே”1 |
(அகம் - 324) |
எனவரும். பிறவுமன்ன. |
1. பொருள் : கிளி வளர்த்த கிளிப்பிள்ளையின் சிறகு போல மழை பெய்து வளர்த்த பசிய பயிர் வளர்ந்த காட்டிடத்து சுனைகளில் மழை பெய்தலால் எழும் மொக்குள் தோன்றி மறைதல் போலச் சேற்றிலே காற்று கிளைகளை உதிர்க்கவீழும் மலர்கள் பொருதலால் எழும் மொக்குள் தோன்றி மறையும்படியாக வீழ்ந்து நீர் அறலில் அழகு செய்யும் வண்டு உண்ணும் மலர்ப்பரப்பைக் கிழித்துக்கொண்டு தலைவனின் தேர்ச்சக்கரம் செல்லும்வழியே பாம்பு ஒன்றன்பின் ஒன்று ஊர்வதுபோல நீர் செல்லும்படியாக நெடுந்தகையின் தேரானது முல்லை கமழும் மாலைக் காலத்தில் நகரைப் புகுதல் தெரிந்து செல்லுகின்றது. அதனால் இனி மடமொழி அரிவையாகிய மனையோள் விருந்தும் பெறுவாள் போலும். இளையோர் கூற்று. |