பக்கம் எண் :

கற்பியல் சூ.36265
 

“வேட்டோர் திறத்து விரும்பிய நின்பாகனும்
நீட்டித்தாயென்று கடாங்கடுந்திண்டேர்
பூட்டுவிடாஅ நிறுத்து”
1
  

(கலி-66)
 

எனவும் வரும்.
  

இன்னும் சான்றோர் கூறிய செய்யுட்களில் இதுபோல வருவன பிறனனைத்தும் உய்த்துணர்ந்து கொள்க.
  

சிவ
  

காமநிலையுரைத்தலாவது    தலைவனிடம் நீ பிரியின் இவள் காமம் மிகும் என்று  கூறுதல்  என இளம்
பூரணரும்  தலைவனது  காம  மிகுதிகண்டு  அதன்  இழிநிலையைக்  கூறுதல் என   நச்சினார்க்கினியரும்
பொருள் உரைப்பர். காமத்தின் இழிநிலை  கூறுவது  அதனிற் செல்லாமல் அறச் செயலில்   ஈடுபடுத்தற்குக்
கூறுவதாம்.  அது  அந்தணர்  அல்லது  முனிவரது   செயலாமேயன்றிப்  பாங்கனாகும் பார்ப்பானுக்குரிய
தாகாது.
 
  

இச்சூத்திரம்     பார்ப்பான்  தலைவனுக்குக்  கூறும்   கூற்றுகளைக்   கூறுவதாக    நச்சினார்க்கினியர்
கொண்டார்.   இளம்பூரணர்   காமநிலையுரைத்தலும்   தேர்நிலை   யுரைத்தலும்    செலவழுங்குவித்தலும்
ஆகியன    தலைவன்பாற்கூறும்   கூற்றுகளாகவும்,    கிழவோன்    குறிப்பினை    எடுத்துக்    கூறலும்
செலவுறுகிளவியும்  ஆகியன  தலைவிபாற்  கூறும்  கூற்றுகளாகவும்,   ஆவொடுபட்ட   நிமித்தம்   கூறல்
இருவர்பாலும்    கூறும்    கூற்றாகவும்    கொண்டார்.    வெள்ளைவாரணனார்    காமநிலையுரைத்தலும்
ஆவொடுபட்ட   நிமித்தம்    கூறலும்    ஆகியன    இருவர்பாலும்  கூறும்  கூற்றுகள்  எனவும்,  தேர்
நிலையுரைத்தலும்  கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்  செலவுறு  கிளவியும்  ஆகியன  தலைவிபால்
கூறும் கூற்றுகள் எனவும் செலவழுங்குவித்தல் தலைவன்பால் கூறும் கூற்று எனவும் கொண்டார்.
  

தேர்நிலையுரைத்தல்  என்பதற்கு  இளம்பூரணர்,  தலைவனிடம் தலைவியின் காம மிகுதியைக்  கூறினும்
ஆராய்ச்சி நிலையால் ஏதுக்கள் காட்டிக் கூறுதல் என்றுகூற, நச்சினார்க்கினியர்


1 பொருள்  : நீ  விரும்பிய  பரத்தையரிடத்தே நீ செல்லுதலைத் தானும் விரும்பிய நின் பாகனானவன்,
நீ  இம்மனையிலேயே  காலம் தாழ்த்தினாய்  என்று கருதி பூட்டுவிடாத தேரை விரைவில் செலுத்தும்.
அதற்கு முன்னே நீ சென்று அப்பரத்தையர் கோபத்தை நிறுத்துவாயாக.