பக்கம் எண் :

268தொல்காப்பியம் - உரைவளம்
 

இ-ள்    :  அன்பு  தலைப்பிரிந்த  கிளவி  தோன்றில்-அன்பு  இருவரிடத்தும்  நீங்கிய   கடுஞ்சொல்
அவ்வாயில்  களிடத்துத்  தோன்றுமாகில்,  சிறைப்புறங் குறித்தன்று  என்மனார்  புலவர். ஒருவர்க்கொருவர்
சிறைப்புறத்தாராகக் கூறல் வேண்டுமென்று கூறுவற் புலவர் என்றவாறு.
  

‘தோன்றின்’   என்பது படைத்துக் கொண்டு கூறுவரென்பதாமாகலின் ‘குறித்தன்று’ என்பது  ‘போயின்று’
என்பது  போலறகரம்   ஊர்ந்த   குற்றியலுகரம்.  ‘அறியாமையின்’  என்னும்  (50)  நற்றிணைப்  பாட்டும்
உதாரணமாம். அது சிறைப்புறமாகவுங் கொள்ளக்கிடந்தமையின்.
  

சிவ.
  

இச்சூத்திரம் தலைவியின் தற்புகழ்ச்சிக்கு இடம் கூறுகின்றது.
  

இ-ள்  : தலைவிக்குத் தலைவன் முன்னர்த் தன்னைப் புகழ்ந்து  கூறும்  கூற்று எவ்விடத்து நிலையிலும்
இல்லை;  ஆனால்  முன்னே   கூறப்பட்ட  தலைவன்   பரத்தையிற்பிரிந்து  வந்தவழி   அவன்  தன்னை
இரத்தலும் தெளித்தலும் ஆகிய இரண்டிடத்து மட்டும் தற்புகழ் கிளவி கிழத்திக்கு உண்டு என்றவாறு.
  

நச்சினார்க்கினியர்,   முற்படக்கிளந்த இரண்டு  என்பன  தாய் போல் கழறித் தழீஇக் கோடல் என்பதும்
அவன்  சோர்பு  காத்தற்கு மகன்தாய்  உயர்பு தன் உயர்பாகும் என்பதும் ஆகியன  என்றார்.  தாய்போற்
கழறித் தழீஇக் கோடல் என்பதற்கு அவர் கூறிய
  

“பரத்தையிற் பிரிவு நீங்கிய தலைவன் தன்னினும்
உயர்ந்த குணத்தினள் எனக் கொள்ளுமாற்றான்
மேல்நின்று மெய்கூறும் கேளிராகிய தாயரைப்
போலக் கழறி அவன் மனக் கவலையை மாற்றிப்
பண்டுபோல் மனங் கோடல்”
   

எனும்  உரைக்கு  ஏற்பத்  தலைவி தற்புகழ் கிளவி பொருந்துவதாகும். ஆனால்  அவன்  சோர்பு  காத்தல்
கடன் எனப்படுதலின் “மகன்தாய் உயர்பும் தன் உயர்பாகும்” என்பதற்கு அவர் கூறிய
  

“தான் நிகழ்த்துகின்ற இல்லறத்தால் தலைவற்கு
இழுக்கம் பிறவாமற் பாதுகாத்தல் தலைவிக்குக்