பக்கம் எண் :

கற்பியல் சூ.39269
 

கடப்பா டென்று கூறப்படுதலால் மகன் தாயாகிய
மாற்றாளைத் தன்னின் இழிந்தாளாகக் கருதாது
தன்னோடு ஒப்ப உயர்ந்தாளாகக் கொண்
டொழுகுதல் தனது உயர்ச்சியாம்.”
   

என்னும்     உரைக்கு  அது   பொருந்தாது. என் எனின், மாற்றாளை உயர்த்துவதன்  மூலம் தன்னை
உயர்த்திக்  கொண்டாள் என்பதல்லது தலைவன்  முன்னர் அவனினும்  தன்னை  உயர்த்திக்  கொண்டாள்
என்பது  இல்லையாதலின்.  அன்றியும்  ‘மகன்தாய்  உயர்பும்  தன் உயர்பாகும்’ என்பதற்குத் தலைவனின்
பின்முறைவதுவையினளாகிய   மாற்றாள்   மகனுக்குத்  தாயாகிய   தலைவியை   உயர்த்தலும்   தன்னை
உயர்த்தியதாகும் எனவும் பொருள் கொள்ளலாம் என  அவர்  கூறியிருத்தலின் அக்கூற்றைத்  தலைவியின்
தற்புகழ் கிளவிக்கு ஏற்றல் இயலாதாதலினாலும் அவர் உரை பொருந்தாது என்க.
  

தலைவியின் தற்புகழ்ச்சி
  

178.

தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்தல்
எத்திறத் தானும் கிழத்திக்கு இல்லை
முற்பட வகுத்த இரண்டலங் கடையே. 

(39)
 

இளம்.
  

இது தலைவிக்குரியதோர் மரபுணர்த்திற்று.
  

இ-ள்:   தலைவன்   முன்னர்த்   தன்னைப்   புகழுங்  கூற்று  எவ்வழியானுங்  கிழத்திக்கு  இல்லை.
முற்படக்கூறிய இரண்டிடமும் அல்லாத வழி யென்றவாறு.
  

அவையாவன    தலைவன்    பரத்தையிற்    பிரிந்து   வந்தவழி   இரத்தலுந்   தெளித்தலும்   என
அகத்திணையியலுட்
1 கூறிய இரண்டும். அவ்வழிப் புகழ்தலாவது.
  

“ஒரூஉநீ எம்கூந்தல் கொள்ளல் யாம்நின்னை
வெரூஉதுங் காணுங்கடை”
2
  

(கலித்-87)

1 அகத்திணையியல் 33
  

2 பொருள்  : தலைவ!  நின்னைக் காணும்போது  யாம் அஞ்சுவேம்; ஆதலின் நீங்குக; எம் கூந்தலைத்
தொடாதீர். எம்(எனத் தன்னையுயர்த்தினாள்.)