“யாந்தமக் கொல்லோ மென்ற தப்பற்குச் சொல்லா தகறல் வல்லு வோரே”1 |
(குறுந்-79) |
இது சொல்லாது பிரிதல். |
“அரிதாயவறனெய்தி” (கலி-11). இது சொல்லிப்பிரிதல். |
சிவ |
இச்சூத்திரம் தலைவன் தலைவியை வன்புறையாற் பிரியுங்காலம் உணர்த்துகின்றது. |
(இ-ள்); தலைவி களவிலும் கற்பினும் துன்புறும் காலங்கள் எல்லாவற்றிலும் தலைவன் அவள் ஆற்றுமாறு வற்புறுத்தியல்லது பிரிதல் இல்லை என்றவாறு. |
துன்புறுபொழுதின் எல்லாமும் என உம்மையை மாற்றியுரைக்க. |
‘துன்புறு பொழுதினும்’ என்பது களவுப் பிரிவைக் குறிப்பதாகவும் ‘எல்லாம்’ என்பது கற்புப் பிரிவுகளைக் குறிப்பதாகவும் இளம்பூரணர் கொண்டார். அதனினும் யான் கூறியவாறு கொள்வதே சிறக்கும். |
நச்சினார்க்கினியர், ‘துன்புறுபொழுதினும்’ என்பதற்கு, |
“உணர்த்தாது பிரிந்து தலைவி துன்பம் மிக்க பொழுதினும், உம்மையான் உணர்த்திப் பிரிந்து துன்பம் மிகாத பொழுதினும்” |
எனவுரைத்தது சிறவாது. உணர்த்தாது பிரியுங்கால் தலைவியுடன் முயங்கும்போது முன்னையினும் அதிகம் தலையளிசெய்தமையைத் தெருட்டியதாக (வற்புறுத்தியதாக)க் கொள்வர் அவர். அக்காலம் துன்புறுபொழுதாக ஆகாது. முன்னையினும் செய்த தலையளி அவன் பிரிந்த பின்னர் நினைந்து துன்புறக் காரணமாகுமேயன்றி வனபுறையாகாது. எல்லாம் என்பதற்கு அவர், சுற்றமும் தோழியும் ஆயமும் தலைவியின் குணங்களாகிய நாண்மடம் அச்சமும் எனக் கொண்டு அவற்றை வலியுறுத்திப் பிரிவான் எனக் கூறியதும் சிறவாது; வற்புறுத்தலுக்கு அவையெல்லாம் காரணமாக அமைதலால் என்க. |
1 பொருள் : யாம் தமது பிரிவிற்கு இசையோம் என்ற தவறுக்காக நம்மிடம்சொல்லாமலே பிரியவல்லவர்க்கு. |