பக்கம் எண் :

கற்பியல் சூ.43277
 

செலவழுங்கல்
  

183.

செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே
வன்புறை குறித்தல் தவிர்ச்சியாகும். 

(44)
 

பி.இ.நூ.
  

நம்பியகம் 88
  

தலைவி தன்னையும் தன்மனம் தன்னையும்
அலமரல் ஒழித்தற்கு அழுங்குவ தல்லது
செல்வத் தோன்றல் செல்லான் அல்லன்.
    

இல.வி.456
  

நம்பியகச் சூத்திரமே.
  

இளம்
  

இதுவுமது.
  

இ-ள் :  தலைவன்  போகக்  கருதித் தவிர்தல் போகாமை1யன்று, தலைவியை வற்புறுத்தலைக் குறித்துத்
தவிர்ந்த தவிர்ச்சியாம் என்றவாறு.
  

எனவே   வினைமேற்   செல்லுங்   காலத்துத்   தலைவி   பொறாள்   எனப்   போகாமை  இல்லை,
வற்புறுத்திப்போம் என்ற வாறாம்.
  

நச்
  

இது செலவழுங்கலும் பாலையாமென்கின்றது :
  

இதன் பொருள்:- செலவிடை  அழுங்கல்   செல்லாமை   அன்றே-தலைவன்   கருதிய   போக்கினை
இடையிலே  தவிர்ந்திருத்தல்  பிரிந்துபோதல்  ஆற்றாமைக்கன்று, வன்புறை  குறித்தல்   தவிர்ச்சி ஆகும்.
தலைவியை ஆற்றுவித்துப் பிரிதற்குத் தவிர்ந்த தவிர்ச்சியாகும் என்றவாறு.
  

“மணியுரு விழந்த வணியிழை தோற்றங்
கண்டே கடிந்தனஞ் செலவே யொண்டொடி
யுழையே மாகவு மினைவோள்

பிழையலண் மாதோ பிரிதுநா மெனினே”
2
  

(அகம்-5)


1 போகாமையன்று-போகாமைக்கு அன்று.
  

2 பொருள்    :  அணியிழையுடையளாகிய   தலைவியின்   மணிபோலும்   நிறமுடைய   உடம்பின்
பொலிவிழப்பைக்