பக்கம் எண் :

278தொல்காப்பியம் - உரைவளம்
 

“களங்காய்க் கண்ணி நார்முடிச்சேர
லிழந்த நாடுதந்தன்ன

வளம்பெரிது பெறினும் வாரலென்யானே”
1
  

(அகம்-199)
 

இவை வன்புறை குறித்துச் செலவழுங்குதலிற் பாலையாயிற்று.
  

வினைவயின் தலைவன் மரபு
  

184. 

கிழவி நிலையே வினையிடத் துரையார்
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்.

(45)
 

இளம்.
  

இ-ள்:  உரையாமை  யாவது2  உருபு  வெளிப்பாடு.  அதனை  வினை நிகழுமிடத்து உரைக்கப் பெறார்.
தலைமக்கள் தமது வினை முடிந்த காலத்து விளங்கித் தோன்றுமென்றவாறு.
  

எனவே,  வினையிடத்துள்  நினைப்பாராயினும்  அமையும்.  உரைக்கப்  பெறார் என்பதூஉம், வென்றிக்
காலத்துக் குற்றமறத் தோன்றும் என்பதூஉம் கொள்ளப்படும்.
  

உதாரணம்
  

“தங்கிய ஒள்ளொளியோலையதாய்த் தடமா மதின்மேல்
பொங்கிய வேந்தர் எரிமுகந்தோன்றின்றுபோது கண்மேற்
பைங்கயல் பாய்புனற் பாழிப் பற்றாரைப் பணித்த தென்னன்

செங்கயலோடு சிலையுங் கிடந்த திருமுகமே”
3

 

(பாண்டிக் கோவை)
  

எனவரும்.


கண்டே  பிரிந்து  செல்லுதலைத்  தவிர்த்தேன்.  ஏன்  எனின்  இப்போது பக்கத்தில் இருக்கும்போதே
வருந்துகிறாள்; நாம் பிரிவோம் எனின் உயிர்வாழாள்.

 

1 களங்காய்  கண்ணி  நார்  முடிச்சேரன் என்பான் தான் இழந்த நாட்டை மீளப் பிடித்தாற்போல பெரும்
பொருளைப் பெறுவதாயிருந்தாலும் நெஞ்சே நின்னோடு வாரேன்.
  

2 உரையாமையாவது-உரையாமைக்குரிய பொருளாவது. அது   உருவெளிப்பாடு.  அது  கிழவி  நிலை
எனப்பட்டது.
  

3 பொருள்:   மலர்கள்  மீது  கயல்பாயும்  நீருடைய  பாழி  என்னும்  ஊரில்  பகைவரைப்  பணிவித்த
பாண்டியனது