நச். |
இஃது, அகத்திணையியலுட் ‘பாசறைப் புலம்பலும்’(41) என்றார், ஆண்டைப் புலம்பல் இன்னுழியாகாது இன்னுழியாமென வரையறை கூறுகின்றது. |
இதன் பொருள்: கிழவி நிலையே வினையிடத்து உரையார் தலைவியது தன்மையை வினைசெய்யா நிற்றலாகிய விடத்து நினைந்து கூறினானாகச் செய்யுள் செய்யப் பெறார். வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்-வெற்றி நிகழுமிடத்தும் தான் குறித்த பருவம் வந்துழியும் தூது கண்டுழியும் வருத்தம் விளங்கிக் கூற்றுத் தோன்றிற்றாகச் செய்யுள் செய்ப என்றவாறு. |
‘உரையார்’ எனவே நினைத்தலுள தென்பதூஉம் அது போர்த்திறம் புரியும் உள்ளத்தாற் கதுமென மாயுமென்பதூஉங் கொள்க. வினையிடம்-வினைசெய்யிடம், காலத்துமென்னும் எச்சவும்மை தொக்குநின்றது. அன்றி அங்ஙனம் பாடங் கூறலும் ஒன்று. |
உதாரணம் |
*”வேளாப் பார்ப்பான் வாளரந்து மித்த வளைகளைந் தொழிந்த கழுந்தி னன்ன |
கயலும் வில்லும் கிடந்த (கண்ணும் புருவமும் உள்ள) தலைவியின் முகமானது, பெரிய மதில் மீது சினந்து வந்த பகைவேந்தர்கள் ஒளியே ஓலையாக (விறகாக) அமைந்து எரிந்துள்ள இப்போர் முகத்தில் எனக்கெதிரே தோன்றும். |
* பொருள்: நன்னுதலரிவையானவள், வேள்வி செய்யாத ஊர்ப் பார்ப்பான் அரிய அரத்தால் அறுத்து வளையல்கள் ஆக்கி ஒழித்த சங்கின் முனைபோன்ற பகன்றையின் அரும்புகள் மழைத்துளியால் மலரும்படியான தைத் திங்களின் கடைநாளில் ஞாயிறும் மறையும் படியான பனி வாடையுள்ள வைகறைப் பொழுதில், மேகமானது விசும்பு தோலுரிப்பதுபோல் ஆகாயத்தில் தென்புலமாகச் செல்லும்படியான இரவுக் காலத்துத் தனியளாய் அவ்விரா வெள்ளத்தை நீந்தி தன்னூரில் உள்ளாள். நாமோ எனின் பகைமதிற்கதவம் குத்தி மழுங்கிய கோட்டினையுடைய யானையின் மணியோசையும், கழியோகெட்டிய தோலாகிய கேடகத்து அம்புகள் தைப்ப எழும் ஓசையும் முரசவொலியோடு முழங்கும் யாமத்தில் உறையினின்றும் கழித்து மீளச்செயாத வாளுடைய வலியதோலுடைய இரவில் தூக்கம் மறந்த சேனைகளுடன் வலிய சினமிக்க வேந்தனின் பாசறையிடத்தேம், |