பக்கம் எண் :

290தொல்காப்பியம் - உரைவளம்
 

குவளை யுண்கணேஎர் மெல்லியன்
மலரார் மலிர்நிறை வந்தெனப்
புனலாடு புணர்துணையாயின ளெமக்கே”
1
  

(ஐங்-72)
 

இது,  தலைவி  புலவி  நீங்கித்  தன்னொடு  புனலாடல்  வேண்டிய  தலைவன்,  முன் புனலாடியதனை
அவள் கேட்பத்தோழிக் குரைத்தது.
  

“வண்ணவொண்டழை” (ஐங்குறு-73)
  

“விசும்பிழி தோகை” (ஐங்குறு-74) இவையும் அது.
  

“புனவளர் பூங்கொடி”, என்னும் மருதக்கலி (92) யுள்
  

“அன்ன வகையால் யான்கண்ட கனவுதான்
நன்வாயாக் காண்டை நறுநுதால் பன்மாணுங்
கூடிப் புணர்ந்தீர் பிரியன் மினீடிப்
பிரிந்தீர் புணர்தம்மினென்பனபோல
வரும்பவிழ் பூஞ்சினை தோறுமிருங்குயி
லானாதகவும் பொழுதினான் மேவர
நான் மாடக்கூடன் மகளிருமைந்தருந்
தேனிமிர் காவிற் புணர்ந்திருந்தாடுமா
ரானாவிருப்போடணியயர்பகாமற்கு
வேனில் விருந்தெதிர்க் கொண்டு”
2

  

என்னுஞ்  சுரிதகத்துக்  காவிற்  புணர்ந்திருந்தாடநீயுங்  கருதெனத்  தலைவன் தலைவிக்குக் கூறியவாறு
காண்க.
  


1. பொருள் : தழையுடையுடுத்த அல்குலும், கூந்தலும், உண் கண்ணும்  அழகும் மெல்லியலும்   உடைய
தலைவி களவுக்  காலத்தில் மலர்களைச் சுமந்து புதுநீர் வந்ததாக எமக்குப் புனலாடுதற்குப் பொருந்திய
புணையாக ஆயினாள்.
  

2. பொருள்:    நன்னுதல!  “பல  மாண்புண்டாகப்  புணர்ந்தோரே  பிரியாதீர்.  புணர்ச்சி  நீட்டித்துப்
பிரிந்தோரே இனிக்கூடுமின்”  என்று  கூறுவனபோலக்  கருங்குயில்கள் பூங்கொம்புகளில் இருந்து தம்
பெடைகளை அழைக்கும் இளவேனிற் பொழுதின்கண் காமனுக்கு விருந்திடுதல்வர எதிர்கொண்டு கூடல்
மகளிரும்  கணவரும்  சோலையில்  கூடியிருந்து  விளையாடும்  பொருட்டு அணி அணிவர். ஆதலின்
பிரிதலும்  புணர்தலும்  ஆகிய பகுதியால்  யான்  கண்ட  கனவு  நல்ல  உண்மையாம்படி மனதாலே
நினைப்பாயாக.