“துயிலின்றி யாநீந்தத் தொழுவையம் புனலாடி மயிலியலார் மருவுண்டு மறந்தமைகு வான்மன்னே;’ |
(கலித்-30) |
என்று தலைவன் பதியிகந்து நுகர்ந்தமை தலைவி கூறியவாறு காண்க. |
நச். |
இது, தலைவற்குங், காமக்கிழத்தியர்க்குந் தலைவியர்க்கும் உரியதோர் மரபு கூறுகின்றது. |
(இ-ள்) : யாறும் குளனும் காவும் ஆடி-காவிரியுந் தண்பொருனையும் ஆன்பொருனையும் வையையும் பேலும் யாற்றிலும் இரு காமத்திணையேரி போலும் (பட்டினப்-39) குளங்களிலும், திருமருதந் துறைக்காவே போலுங் (கலி-25) காக்களினும் விளையாடி, பதி இகந்து நுகர்தலும் உரிய என்ப-உறை பதியைக் கடந்துபோய் நுகர்ச்சி யெய்துதலுந் தலைவற்குங் காமக்கிழத்தியர்க்குந் தலைவியர்க்கும் உரிய என்றவாறு. |
ஏற்புழிக் கோடலால் தலைவியர்க்குச் சிறுபான்மையென்றுணர்க. |
“கதிரிலை நெடுவேற் கடுமான் கிள்ளி மதில்கொல் யானையிற் கதழ்வு நெரிதந்த சிறையழி புதுப்புனலாடுக மெம்மொடுங் கொண்மோ வெந்தோள் புரை புணையே”1 |
(ஐங்குறு-78) |
இது, காமக் கிழத்தி நின்மனைவியோடன்றி எம்மொடு புணைகொள்ளின் யாமாடுதுமென்று புனலாட்டிற்கு இயைந்தான் போல மறுத்தது. |
“வயன்மல ராம்பற் கயிலமை நுடங்குதழைத் திதலை யல்குற்றுயல்வருங் கூந்தற் |
1 பொருள் : தலைவ! நின்மனைவியொடு ஆடுவதை விட்டு எம்மொடு எம்தோளையே புணையாகக் கொண்டு ஆடவருவாயாயின், ஒளியுடைய இலைபோலும் வேலுடைய கடிய குதிரையுடைய கிள்ளியின் பகைவர் மதிலையழிக்கச் செல்லும் யானையைப்போல விரைந்து வன்மையுடன் கரையை யழிக்கும்படி வரும் புதுப்புனலில் யாம் நீராடுவோம். |